தகவல்களை மின்-அஞ்சலில் பெற !
karaikal ammaiyaar Karaikal lady of angel church karaikal kailasanathaar veethi ula karaikal mosque Title of image Title of image

11-07-2017 காரைக்கால் முழு கடையடைப்பு போராட்டம் - வணிக நிறுவனங்கள் ,கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டு இருந்தன - பேருந்துகள் இயக்கப்பட வில்லை

புதுச்சேரியில் ஆளும் காங்கிரஸ் கட்சியின் ஆலோசனை இல்லாமல் மத்திய உள்துறை அமைச்சகத்தால் நியமிக்கப்பட்ட 3 நியமன சட்டமன்ற உறுப்பினர்களின்  நியமனத்தை எதிர்த்தும் இந்த விவகாரத்தில் புதுவை மாநில துணை நிலை ஆளுநர் கிரண்பேடி மத்திய அரசின் ஏஜெண்டாக செயல்பட்டதை  கண்டித்தும் 11-07-2017 (செவாய்க்கிழமை ) இன்று காரைக்காலில் முழு கடையடைப்பு போராட்டத்துக்கு  அழைப்பு விடுக்கப்பட்டது இதனையடுத்து இன்று காரைக்காலில் பேருந்துகள் எதுவும் இயக்கப்படவில்லை காரைக்கால் புதிய பேருந்து நிலையம் பேருந்துகள் மற்றும் ஆட்கள் இல்லாமல் வெறிச்சோடி கிடந்தது.

11-07-2017 பந்த் அன்று வெறிச்சோடி கிடந்த காரைக்கால் புதிய பேருந்து நிலையம்
11-07-2017 தற்பொழுது காரைக்காலில் முக்கிய வீதியால் பாரதியார் வீதியில் மாங்கனி திருவிழா கடைகள் அமைக்கப்பட்டு உள்ளன ஆனாலும் இன்று காலை முதல் அந்த கடைகள் அணைத்து அடைக்கப்பட்டே இருந்தன காரைக்காலின் முக்கிய வீதிகளான பாரதியார் வீதி ,மாதா கோயில் வீதி ,காமராஜர் சாலை ,திருநள்ளாறு சாலை ,நேரு வீதி மற்றும் காரைக்கால் புறநகர் சாலை என அணைத்து சாலைகளிலும் மக்கள் நடமாட்டம் மிக குறைவாகவே  இருந்தது.

11-07-2017 காரைக்கால் திருநள்ளாறு சாலை
அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு இருந்ததால் பொதுமக்கள் அவசர தேவைகளுக்கு காய்கறிகள் மற்றும் பழங்கள் வாங்க முடியாமல் இன்னலுக்கு உள்ளாகினர் ஆனாலும் மாலை 6:00 மணிக்கு பிறகு அணைத்து கடைகளும் திறக்கப்படும் என்பதால் இன்னும் சற்று நேரத்தில் காரைக்காலில் இயல்பு வாழ்க்கை திரும்பலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.


பகிர்ந்து மகிழுங்கள்
சமூக →
தொடர →
பகிர →

0 comments:

கருத்துரையிடுக

ஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்

Related Posts Plugin for WordPress, Blogger...