தகவல்களை மின்-அஞ்சலில் பெற !
karaikal ammaiyaar Karaikal lady of angel church karaikal kailasanathaar veethi ula karaikal mosque Title of image Title of image

12-07-2017 இன்று தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழைக்கு வாய்ப்புள்ள பகுதிகள் - 23-07-2017 அல்லது 24-07-2017 ஆம் தேதிகளில் கேரளாவில் தென்மேற்கு பருவமழை மீண்டும் வீரியம் அடைய தொடங்கலாம்

12-07-2017 இன்று தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழைக்கு வாய்ப்புள்ள பகுதிகள்.

12-07-2017 இன்று கோயம்பத்தூர் மாவட்டம் வால்பாறை ,போடிநாயகனுர் ,கோவில்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் லேசான மழையை எதிர்பார்க்கலாம் மேலும் வழக்கம் போல மதுரை ,சிவகங்கை மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களின் ஒரு சில பகுதிகளில் மழையை எதிர்பார்க்கலாம் குறிப்பிட்டு  சொல்லவேண்டும் என்றால் அருப்புக்கோட்டை ,விருதுநகர் ,தேவகோட்டை உள்ளிட்ட பகுதிகளில் ஓரளவு மழையை எதிர்பார்க்கலாம்.

12-07-2017 இன்று விழுப்புரம் மற்றும் கடலூர் மாவட்டத்தில் நல்ல மழையை எதிர்பார்க்கலாம் புதுச்சேரி மாவட்டத்தின் ஒரு சில பகுதிகளிலும் நல்ல  மழைக்கு வாய்ப்புண்டு.

12-07-2017 காரைக்கால் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களை பொறுத்தவரையில் இன்று மழைக்கு வாய்ப்புண்டு நாகை மாவட்டம் மயிலாடுதுறை ,தரங்கம்பாடி உள்ளிட்ட பகுதிகளில் மழையை எதிர்பார்க்கலாம் காரைக்கால் மாவட்டத்தின் ஒரு சில பகுதிகளிலும் மழையை எதிர்பார்க்கலாம்.

12-07-2017 இன்று தஞ்சை மற்றும் திருவாரூர் மாவட்டத்திலும் லேசான மழைக்கு வாய்ப்புண்டு இன்று கும்பகோணம் பகுதிகளில் நல்ல மழைக்கு வாய்ப்புண்டு.

நான் ஏற்கனவே இதற்கு முந்தைய பதிவுகளில் பதிவிட்டு இருந்தது போல 2017 ஆம் ஆண்டு ஜூலை மாத மூன்றாவது வார இறுதிநாட்களில் அல்லது நான்றாம் வாரத்தில் கேராளாவில் தென்மேற்கு பருவமழையின் வீரியம் மீண்டும் அதிகரிக்க தொடங்கலாம் அதாவது 23-07-2017 அல்லது 24-07-2017 ஆகிய தேதிகளில் கேரளாவில் அதிக மழை பெய்ய தொடங்கலாம் அதனால் கோயம்பத்தூர் ,தேனி ,நீலகிரி ,கன்னியாகுமரி,திருநெல்வேலி  என கேரளாவை ஒட்டியுள்ள மாவட்டங்களில் நல்ல மழைக்கு வாய்ப்புண்டு.

பகிர்ந்து மகிழுங்கள்
சமூக →
தொடர →
பகிர →

0 comments:

கருத்துரையிடுக

ஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்

Related Posts Plugin for WordPress, Blogger...