தகவல்களை மின்-அஞ்சலில் பெற !
karaikal ammaiyaar Karaikal lady of angel church karaikal kailasanathaar veethi ula karaikal mosque Title of image Title of image

15-07-2017 இன்று தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழைக்கு வாய்ப்புள்ள பகுதிகள்

15-07-2017 இன்று இரவு திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி ,நாகை மாவட்டம் வேதாரண்யம் ,கோடியக்கரை மற்றும் வேளாங்கண்ணி - வேதாரண்யம் இடையே உள்ள பகுதிகளிலும் கன மழைக்கு வாய்ப்புண்டு மேலும் திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை ,தஞ்சாவூர் மாவட்டம் மதுக்கூர் ,பட்டுக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் குறிப்பிட்டு சொல்லும்படியான அளவு மழை பதிவாகலாம்.

15-07-2017 இன்று வேலூர் ,திருவண்ணாமலை ,தருமபுரி ,கிருஷ்ணகிரி ,ஈரோடு ,கோயம்பத்தூர் ,சேலம் ,திண்டுக்கல் ,திருச்சி ,தஞ்சாவூர் ,நாகப்பட்டினம் ,பெரம்பலூர் ,அரியலூர் ,கடலூர் ,விழுப்புரம்  மற்றும் வழக்கம்போல சிவகங்கை ,புதுக்கோட்டை மாவட்டங்களிலும்  மழைக்கு வாய்ப்புண்டு.

15-07-2017 இன்று வால்பாறை ,அறந்தாங்கி ,நாமக்கல் ,வாணியம்பாடி ,சிவகங்கை ,அம்மாபட்டினம் ,திருக்கோவிலூர் ,தர்மபுரி ,விழுப்புரம் ,சீர்காழி உள்ளிட்ட பகுதிகளில் ஓரளவு நல்ல மழையை எதிர்பார்க்கலாம்.

15-07-2017 இன்று புதுச்சேரி மாவட்டத்திலும் ஒரு சில பகுதிகளில் மழைக்கு வாய்ப்புண்டு. 

15-07-2017 இன்று நாகப்பட்டினம் மாவட்டத்தை பொறுத்தவரை வேளாங்கண்ணி மற்றும் வேதாரண்யம் இடையே உள்ள பகுதிகளிலும் கோடியக்கரையிலும் நல்ல மழைக்கு வாய்ப்புண்டு மேலும் நாகப்பட்டினம் மற்றும் காரைக்கால் மாவட்டத்தின் ஒரு சில பகுதிகளிலும் லேசான மழையை எதிர்பார்க்கலாம்.


எதிர்பார்த்ததை விட முன்பாகவே 16-07-2017 (நாளையே  ) வங்கக்கடலில் மேலடுக்கு சுழற்சி உருவாக வாய்ப்பு இருப்பதால் இனி தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பகல் நேர வெப்பநிலையானது நாளை முதல் அதிகரிக்க வாய்ப்புள்ளது அடுத்த சில நாட்களுக்கு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பகல் நேர வெப்பநிலையானது கடந்த சில நாட்களுடன் ஒப்பிடுகையில் உயர்ந்தே  காணப்படும்.


பகிர்ந்து மகிழுங்கள்
சமூக →
தொடர →
பகிர →

0 comments:

கருத்துரையிடுக

ஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்

Related Posts Plugin for WordPress, Blogger...