தகவல்களை மின்-அஞ்சலில் பெற !
karaikal ammaiyaar Karaikal lady of angel church karaikal kailasanathaar veethi ula karaikal mosque Title of image Title of image

16-07-2017 இன்று தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கும்பகோணம் பள்ளி தீ விபத்தின் 13ஆம் ஆண்டு நினைவு தின அஞ்சலி

கடந்த 2004 ஆம் ஆண்டு ஜூலை 16 ஆம் தேதி கும்பகோணம் ஸ்ரீ கிருஷ்ணா பள்ளியில் ஏற்பட்ட தீ விபத்தால் 94 பிஞ்சுக் குழந்தைகள் தீயின் கோரப்பிடியில் சிக்கி துடிதுடித்து உடல் கருகி உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களில்  பெருமபாலானோர் 9 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் என்பது தான் மிகவும் வேதனைக்குரிய விஷயம் மதிய உணுவுக்கான சமையல் வேலைகள் நடைபெற்ற பொழுது இந்த எதிர்பாராத தீ விபத்து நடைபெற்றதாக அப்பள்ளி  நிர்வாகம் சார்பில் அப்பொழுது தெரிவிக்கப்பட்டது.

பின்னர் விசாரணையின் பொழுது ஒரே கட்டிடத்தில் மூன்று பள்ளிகளை அந்த பள்ளி நிர்வாகம் இயக்கியது தெரியவந்தது. விதிமுறைகளை மீறி இந்த பள்ளிக்கு அனுமதி வழங்கிய கல்வித்துறை அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டது.தற்பொழுது அரசு கொண்டுவந்திருக்கும் பள்ளி கட்டிடங்களுக்கான கட்டமைப்புகள் மற்றும் கட்டுப்பாடு விதிகளுக்கு  கும்பகோணத்தில் ஏற்பட்ட இந்த தீ விபத்தே காரணம்.

இந்த பள்ளி தீவிபத்தை கேள்விப்பட்ட நமக்கு இது ஒரு செய்தி ஆனால் பள்ளி நிர்வாகம் மற்றும் அரசு அதிகாரிகளின் அலட்சியத்தால் ஒரு தவறும்  செய்யாத அந்த பச்சிளம் குழந்தைகளை இழந்த அந்த பெற்றோர்களுக்கு  இது என்றுமே காலத்தால் அழிக்க முடியாத ரணம்.13 ஆண்டுகள் கடந்த பின்பும் ஜூலை 16 யை நினைக்கையில் என் கண்களின் ஓரத்தில் என்னையறியாமல் ....................இனி வார்த்தைகள் தேவையில்லை கைக்குட்டை தேவைப்படுகிறது.

முடிந்த விஷயத்தை திரும்ப திரும்ப எதற்கு நினைவுதினம் என்று சிலர் கேள்வி எழுப்பலாம் ஆனால் இனி இது போன்றதொரு  நிகழ்வு வேறு எங்கேயும் நடந்து விடக் கூடாது என்பதை  நினைவுபடுத்தவே இதைப்போன்ற நினைவு தினங்கள் தேவைப்படுகின்றன என்பதே நிதர்சனமான உண்மை.

பகிர்ந்து மகிழுங்கள்
சமூக →
தொடர →
பகிர →

0 comments:

கருத்துரையிடுக

ஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்

Related Posts Plugin for WordPress, Blogger...