தகவல்களை மின்-அஞ்சலில் பெற !
karaikal ammaiyaar Karaikal lady of angel church karaikal kailasanathaar veethi ula karaikal mosque Title of image Title of image

17-07-2017 இன்று புதுச்சேரியில் இந்திய குடியரசு தலைவர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நிறைவு பெற்றது

17-07-2017 இன்று உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவின் அடுத்த குடியரசு தலைவரை அதாவது நாட்டின் முதல் குடிமகன் என்று அழைக்கப்படும் ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான வாக்குப்பதிவு புதுச்சேரி சட்டசபை வளாகத்தில் நடைபெற்றது இதில் புதுச்சேரி மாநிலத்தின் 30 சட்டமன்ற உறுப்பினர்களும் தங்களது வாக்குகளை பதிவு செய்தனர்.தற்போதைய இந்திய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் பதிவிக்காலம் வருகின்ற 24-07-2017 (ஜூலை 24) ஆம் தேதியுடன் நிறைவடைவதை அடுத்து நாட்டின் அனைத்து மாநிலங்களிலும் உள்ள சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் எம்.பி க்கள் வாக்களித்து நாட்டின் அடுத்த குடியரசு தலைவரை தேர்ந்தெடுக்க உள்ளனர் அந்த வகையில் புதுச்சேரி மாநிலத்தில் உள்ள சட்டமன்ற உறுப்பினர்கள் வாக்களிக்க புதுவை சட்டமன்ற கட்டிட வளாகத்தில் வாக்குச்சாவடி அமைக்கப்பட்டு இருந்தது இன்று காலை தொடங்கிய வாக்குபதிவில் புதுச்சேரியில் உள்ள அனைத்து சட்ட மன்ற உறுப்பினர்களும் தங்களது வாக்குகளை பதிவு செய்தனர்.

புதுச்சேரி மாநிலத்தில் முதல்வருக்கும் துணை நிலை ஆளுநருக்கும் இடையே இணக்கமான சூழ்நிலைகள் நிலவி வராத நிலையில் இந்த குடியரசு தலைவர் தேர்தல் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.


பகிர்ந்து மகிழுங்கள்
சமூக →
தொடர →
பகிர →

0 comments:

கருத்துரையிடுக

ஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்

Related Posts Plugin for WordPress, Blogger...