தகவல்களை மின்-அஞ்சலில் பெற !
karaikal ammaiyaar Karaikal lady of angel church karaikal kailasanathaar veethi ula karaikal mosque Title of image Title of image

18-07-2017 இன்று புதுச்சேரி துறைமுகத்தில் 1ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது - ஒடிசா அருகே நிலைக்கொண்டிருக்கும் புயலால் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் எந்த வித பாதிப்பும் இருக்காது

18-07-2017 இன்று காலை ஒடிசா அருகே நிலைகொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது தற்பொழுது வலு பெற்று ஒரு புயலாக மாறி உள்ளது இன்னும் சற்று நேரத்தில் இந்த புயலானது ஒடிசா அருகே வலுவிழந்த நிலையில் கரையை கடக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது இதனையடுட்டது தற்பொழுது புதுச்சேரி துறைமுகத்தில் 1 ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

18-07-2017 ஒடிசா அருகே வங்கக்கடல் பகுதியில் நிலைக் கொண்டுள்ள இந்த புயலால் தமிழகம் மற்றும் புதுச்சேரிக்கு எந்த வித பாதிப்பும் இருக்காது  மாவட்டங்களில் இயல்பை விட காற்றின் வேகம் சற்றும் அதிகமாக இருக்கும் சென்னையில் வானம் அவ்வப்பொழுது மேக மூட்டத்துடன் காணப்படும்.ஆந்திரா மாநிலம் விசாகப்பட்டினம் அருகே உள்ள பகுதிகளில்  மிக கனமழைக்கு வாய்ப்புள்ளது.

கடத்த வாரம் நமது தளத்தின்  ஒரு பதிவில் 16-07-2017 அன்று வங்கக்கடலில் அந்தமானுக்கு வட மேற்கு திசையில் ஒரு மேலடுக்கு சுழற்சி உருவாக வாய்ப்பு இருப்பதாக தெரிவித்து இருந்தோம் மேலும் அது வலுவடைந்து ஒடிசா அருகே ஒரு காற்றழுத்த தாழ்வு நிலையாக 18-07-2017 அல்லது 19-07-2017 கரையை கடக்க வாய்ப்பு இருப்பதாக தெரிவித்து இருந்தோம் அதே போல 16-07-2017 அன்று ஒரு மேலடுக்கு சுழற்சி உருவானது தற்பொழுது அது வலு பெற்று புயலாக ஒடிசா அருகே நிலைக்கொண்டுள்ளது.



பகிர்ந்து மகிழுங்கள்
சமூக →
தொடர →
பகிர →

0 comments:

கருத்துரையிடுக

ஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்

Related Posts Plugin for WordPress, Blogger...