தகவல்களை மின்-அஞ்சலில் பெற !
karaikal ammaiyaar Karaikal lady of angel church karaikal kailasanathaar veethi ula karaikal mosque Title of image Title of image

18-07-2017 அல்லது 19-07-2017 தேதிகளில் வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாக வாய்ப்பு - 17-07-2017 அன்று வங்கக்கடலில் ஒரு மேலடுக்கு சுழற்சி உருவாகலாம்

13-07-2017 தற்பொழுது மத்திய பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களில் கன மழை பெய்து வருகிறது இதே வானிலையே தொடர்ந்தால் 15-07-2017 அன்று குஜராத் மற்றும் மகாராஷ்திரா மாநிலங்களில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளது குஜராத் மாநிலத்தின் பல நகரங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்படலாம் மும்பை நகரிலும் மழையின் அளவு அதிகரிக்கலாம்.

இவையெல்லாம் ஒரு புறம் இருக்க தற்பொழுது நிலவும் சூழ்நிலைகளைக் கொண்டு பார்க்கையில் வருகின்ற  17-07-2017 அன்று வங்கக்கடலில் அந்தமானுக்கு வடமேற்கு திசையில் ஒரு மேலடுக்கு சுழற்சி உருவாக வாய்ப்பு உள்ளது அது மேலும் வலு பெற்று 18-07-2017 அல்லது 19-07-2017 ஆகிய தேதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு நிலையாக உருவாகலாம் இந்த காற்றழுத்த தாழ்வு நிலையால் இந்திய வட கிழக்கு மற்றும் வட மாநிலங்களில் மீண்டும் மழையின் அளவு அதிகரிக்கும்.

20-07-2017க்கு பிறகு மகாராஷ்திரா மற்றும் கர்நாடகா மாநிலங்களின் கடலோர பகுதிகளில் மழையின் அளவு மீண்டும் அதிகரிக்க தொடங்கும் இதனையடுத்து கேரளா மாநிலத்தில் அடுத்த சில நாட்களில் மழையின் அளவு அதிகரிக்கும் இதனால் கேரளாவை ஒட்டியுள்ள தமிழக மாவட்டங்கள் பலன் பெரும்.

தற்பொழுது தமிழகத்தின் வட மாவட்டங்களில் வெப்ப சலன மழை பெய்து வருகிறது இது இன்னும் சில நாட்களுக்கு தொடரும்.

வானிலை குறித்த மேலும் பல தகவல்களுடன் மீண்டும் பதிவிடுகிறேன்.


பகிர்ந்து மகிழுங்கள்
சமூக →
தொடர →
பகிர →

0 comments:

கருத்துரையிடுக

ஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்

Related Posts Plugin for WordPress, Blogger...