தகவல்களை மின்-அஞ்சலில் பெற !
karaikal ammaiyaar Karaikal lady of angel church karaikal kailasanathaar veethi ula karaikal mosque Title of image Title of image

18-07-2017 ஒரிசா அருகே வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி - வட ஆந்திரம் மற்றும் ஒரிசாவில் கன மழைக்கு வாய்ப்பு -

இதற்கு முந்தைய பதிவுகளில் தெரிவித்து  இருந்தது போல வங்கக்கடலில் 16-07-2017 அன்று அந்தமானுக்கு வடமேற்கு  திசையில் ஒரு மேலடுக்கு சுழற்சி உருவானது தற்பொழுது அது ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதியாக ஒரிசா மற்றும்  ஆந்திர மாநிலங்களுக்கு அருகே வங்கக்கடலில் நிலைகொண்டுள்ளது.

18-07-2017 இன்று அந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது ஒரிசா அல்லது வட ஆந்திரம் அருகே கரையை கடக்க இருக்கிறது தற்பொழுது வங்கக்கடல் அருகே உள்ள அனைத்து மாநிலங்களின் கடலோர பகுதிகளிலும் காற்றின் வேகம் வெகுவாக அதிகரித்து வருகிறது .இந்த காற்றழுத்த தாழ்வு பகுதியால் இன்னும் சில மணி நேரங்களில் ஒரிசா ,வட ஆந்திரா ,தெலுங்கானா ,சத்திஸ்கர் மற்றும் மஹாராஷ்டிரா மாநிலங்களில் மழையின் அளவு அதிகரிக்க வாய்ப்புள்ளது குறிப்பாக ஆந்திரா ,ஒரிசா மற்றும் சத்திஸ்கர் மாநிலங்களில் ஒரு சில இடங்களில் வெள்ளபெருக்கும் ஏற்படலாம் அடுத்த இரண்டு நாட்களுக்கு அதவாது 19-07-2017 வரை நான் மேலே குறிப்பிட்ட மாநிலங்களில் கன மழை கண்டிப்பாக உண்டு.இதை தொடர்ந்து 20-07-2017 மற்றும் 21-07-2017 ஆகிய தேதிகளில் மத்தியப்பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களிலும் பல இடங்களில் கன மழை பதிவாகலாம்.

தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலங்களை பொறுத்தவரையில் தற்பொழுது காற்றின் வேகம் அதிகரித்து உள்ளது மாலை நேரங்களில் வெப்ப சலனம் காரணமாக ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புண்டு.பகல் நேர  வெப்பநிலையானது கடந்த சில நாட்களுடன் ஒப்பிடுகையில் அதிகரிக்க வாய்ப்புள்ளது.



பகிர்ந்து மகிழுங்கள்
சமூக →
தொடர →
பகிர →

0 comments:

கருத்துரையிடுக

ஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்

Related Posts Plugin for WordPress, Blogger...