தகவல்களை மின்-அஞ்சலில் பெற !
karaikal ammaiyaar Karaikal lady of angel church karaikal kailasanathaar veethi ula karaikal mosque Title of image Title of image

24-07-2017 வரக்கூடிய வாரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வானிலை எப்படி இருக்கும் ?


24-07-2017 இனி வரக்கூடிய வாரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரிக்கு வெப்ப சலன மழைக்கான வாய்ப்பு  பிரகாசமாக உள்ளது என்றே சொல்லலாம் 26-07-2017 முதல் தமிழகத்தின் கடலோர மற்றும் உள் மாவட்டங்களில் மழைக்கான  வாய்ப்பு அதிகரிக்க தொடங்கும் 28-07-2017 க்கு பிறகு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நல்ல மழையை எதிர்பார்க்கலாம் இந்த மழையானது பிறக்க இருக்கும் ஆகஸ்ட் மாதத்திலும் தொடரும்.

24-07-2017 தற்பொழுது வட இந்தியாவில்,வட மேற்கு திசையில் ஒன்று மற்றும் வட கிழக்கு திசையில் ஒன்று என இரண்டு காற்றழுத்த தாழ்வு பகுதிகள் நிலவி வருகின்றன.இதற்கு முன்னரே குஜராத் ,மஹாராஷ்த்திரா ,ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களிலும் அதேபோல வட கிழக்கு திசையில் மேற்கு வங்கம் ,அஸ்ஸாம் போன்ற மாநிலங்களிலும் கடந்த வாரத்தில் கன மழை பெய்து வந்தது.இந்நிலையில் தற்பொழுது நிலவும் இந்த இரண்டு காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் வட இந்தியாவில் மழையின் அளவு சமீப நாட்களில் இல்லாத அளவு அதிகரிக்கலாம்.குறிப்பாக ராஜஸ்தான் மற்றும் குஜராத் மாநிலங்களை பொறுத்தவரையில் வரக்கூடிய வாரத்தில் ஏற்படக்கூடிய இந்த மழையானது வரலாற்றில் இடம்பிடிக்கும்.

28-07-2017 முதல் தமிழக வட கடலோர மாவட்டங்களில் மழை அளவு அதிகரிக்கும் காரைக்கால் ,நாகப்பட்டினம் ,கடலூர் ,புதுச்சேரி ,சென்னை என அனைத்து பகுதிகளிலும் அடுத்து வரக்கூடிய வாரத்தில் மழைக்கு வாய்ப்பு உண்டு.

பகிர்ந்து மகிழுங்கள்
சமூக →
தொடர →
பகிர →

0 comments:

கருத்துரையிடுக

ஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்

Related Posts Plugin for WordPress, Blogger...