தகவல்களை மின்-அஞ்சலில் பெற !
karaikal ammaiyaar Karaikal lady of angel church karaikal kailasanathaar veethi ula karaikal mosque Title of image Title of image

27-07-2017 அன்று ராமேஸ்வரத்தில் மறைந்த முன்னால் இந்திய குடியரசு தலைவர் டாக்டர் அப்துல் கலாம் அவர்களின் நினைவு மண்டப திறப்பு விழா

டாக்டர்  A.P.J.அப்துல் கலாம் அய்யா அவர்கள் 1931 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 15 ஆம் தேதி தமிழகத்தின் ராமேஸ்வரத்தில் பிறந்தார்.திருச்சி புனித ஜோசப் கல்லூரியில் இயற்பியல் பாடப்பிரிவில் தனது பட்டப்படிப்பை முடித்த  அவர் சென்னையில் உள்ள மெட்ராஸ் தொழில்நுட்ப கல்லூரியில் விண்வெளி பொறியில் படிப்பை தொடர்ந்தார்.டிஆர்டிஓ (DRDO ) மற்றும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ (ISRO) விலும் விண்வெளி ஆராய்ச்சியாளராக பணியாற்றினார்.1974 மற்றும் 1998 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற இந்திய அணு ஆயுத சோதனைகளில் இவரது பங்கு மிக முக்கியமானதாக கருதப்படுகிறது.இந்திய 2020 என்ற தலைப்பில் இவர் எழுதிய புத்தகத்தில் இந்தியாவை வல்லரசு நாடாக மாற்றுவதற்கான வழிமுறைகளை இவர் குறிப்பிட்டு இருக்கிறார்.

கனவு மெய்ப்பட வேண்டும் என்றான் என் தேசியக்கவி பாரதி சிறுவயது முதல் நீங்கள் என்னவாக வேண்டும் என்று கனவு காணுங்கள் அதற்காக கடுமையாக போராடுங்கள்  அப்படி செய்தால் எந்தவொரு கனவும் ஒருநாளில் நிஜமாகும் என்றார் A.P.J.அப்துல் கலாம் அய்யா.

2002 ஆம் ஆண்டு இந்திய நாட்டின் உயரிய பதிவியான குடியரசு தலைவர் பதவிக்கு ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சிகளின் பெருவாரியான ஆதரவுடன் நாட்டின் ஜனாதிபதியானார் டாக்டர் A.P.J.அப்துல் கலாம் அய்யா மேலும் A.P.J.அப்துல் கலாம் அய்யா அவர்கள் அஸ்தினாபூரில் உள்ள இந்திய மேலாண்மை நிறுவனங்களில் ஒரு வருகைப் பேராசிரியர் ஆகவும், திருவனந்தபுரத்தில் உள்ள இந்திய விண்வெளி அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தின் வேந்தர் ஆகவும், சென்னை அண்ணா மற்றும் ஜே எஸ் எஸ் மைசூர் பல்கலைக்கழகங்களில் பேராசிரியர் ஆகவும் பணியாற்றியதோடு, சோமாலியாவில் உள்ள பல கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களில் துணை/வருகைப் பேராசிரியர் ஆகவும் பணியாற்றினார்.

1990 ஆம் ஆண்டில் இந்தியாவின் உயரிய விருதான பத்மவிபூஷண் விருதை பெற்ற அவர் கடந்த 2015 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 27 ஆம் தேதி இந்த மண்ணை விட்டு பிரிந்து சென்றார் எந்த ஒரு அரசியல் கட்சியும் அழைப்பு விடுக்காமல் இவருடைய மறைவுக்காக நாடு முழுவதும்  மக்கள் மற்றும் வியாபாரிகளே முன்வந்து துக்கம் அனுசரிக்கும் விதமாக கடையடைப்பில் ஈடுபட்டனர்.


வாழும் காலம் முழுவதும் நாட்டுக்காக தொண்டாற்றிய டாக்டர்  A.P.J.அப்துல் கலாம் அய்யா அவர்களின் 2 ஆம் ஆண்டு நினைவு நாளான 27-07-2017 அன்று அவருடைய நினைவு மண்டபம் பாரத பிரதமர் அவர்களால் திறந்து வைக்கப்பட உள்ளது.


பகிர்ந்து மகிழுங்கள்
சமூக →
தொடர →
பகிர →

0 comments:

கருத்துரையிடுக

ஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்

Related Posts Plugin for WordPress, Blogger...