தகவல்களை மின்-அஞ்சலில் பெற !
karaikal ammaiyaar Karaikal lady of angel church karaikal kailasanathaar veethi ula karaikal mosque Title of image Title of image

27-07-2017 அன்று திருப்பாம்புரம் சேஷபுரிஸ்வரர் ஆலயத்தில் ராகு கேது பெயர்ச்சி விழா

கும்பகோணம் - காரைக்கால் நெடுஞ்சாலையில் கொல்லுமாங்குடிக்கு அருகே அமைந்துள்ளது தான் திருப்பாம்புரம் சேஷபுரிஸ்வரர் கோயில் இந்த கோயிலில் இராசராச சோழன் ,இராசேந்திர சோழன் ,சுந்தர பாண்டியன் மற்றும் சரபோஜி மன்னர்களின்  காலத்து கல்வெட்டுகள் காணப்படுகின்றன அதில் இருந்து திருப்பாம்புரம் சேஷபுரிஸ்வரர் கோயிலின் தொன்மையை அறிய முடிகிறது மேலும் இக்கோயிலின் வரலாறு 3000 ஆண்டுகளுக்கு முன்பே தொடங்கிவிட்டதாக சில குறிப்புகள் தெரிவிக்கின்றன.

திருவாரூர் மாவட்டம் குடவாசல் வட்டத்தில் அமைந்துள்ள இந்த திருப்பாம்புரம் சேஷபுரிஸ்வரர் ஆலயமானது காரைக்காலில் இருந்து சுமார் 30 கி.மீ தொலைவிலும் கும்பகோணத்தில் இருந்து சுமார் 28 கி.மீ தூரத்திலும் அமைந்துள்ளது.இத்திருக்கோயில் அப்பர் ,சுந்தரர் ,சம்பந்தர் ஆகிய மூவராலும் தேவாரம் பாடல் பெற்றது.பாம்பு வந்து தொழுததால் இத்தலம் திருப்பாம்புரம் என்ற பெயர்பெற்றதாக கூறப்படுகிறது.

புகழ்பெற்ற இந்த திருப்பாம்புரம் சேஷபுரிஸ்வரர் ஆலயத்தில் வருகின்ற 27-07-2017 (ஜூலை 27) ஆம் தேதி ராகு கேது பெயர்ச்சி விழா நடைபெற இருக்கிறது.கடந்த 2002 ஆம் ஆண்டுக்கு பிறகு 15 ஆண்டுகள் கழிந்து 10-4-2017 (ஏப்ரல் 10)  ஆம் தேதி தான் இங்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது இதனையடுத்து வரும் 27-07-2017 அன்று மதியம் 12:48 மணிக்கு ராகு பகவான் சிம்ம ராசியிலிருந்து கடகராசிக்கும் கேது பகவான் கும்ப ராசியிலிருந்து மகர ராசிக்கும் இடம் பெயர்கின்றனர் இந்த ராகு கேது பெயர்ச்சியால் மேஷம் ,மிதுனம் ,கடகம் ,சிம்மம்,துலாம் ,தனுசு ,மகரம் போன்ற ராசிகளை சார்ந்தவர்கள் பரிகாரம் செய்ய வேண்டியதிருக்கும் இதனால் ஒவ்வொரு நாளும் ராகு காலத்தில் சிறப்பு பரிகார பூஜைகள் நடைபெற கோயில் நிர்வாகம் சார்பில் ஏற்பாடுகள்  செய்யப்பட்டுள்ளன ஜூலை 27ஆம் தேதி ராகு கேது பெயர்ச்சி நடைபெற இருப்பதாலும் இந்த ஆண்டு இறுதியில் திருநள்ளாறு சனீஸ்வரன் ஆலயத்தில் சனிப்பெயர்ச்சி விழா நடைபெற இருப்பதாலும் காரைக்காலில் மாங்கனி திருவிழா நடைபெற்று வருவதாலும் சில நாட்களாக திருப்பாம்புரம் சேஷபுரிஸ்வரர் கோயிலுக்கு வருகைதரும் பக்த்தர்களின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்து வருகிறது.


பகிர்ந்து மகிழுங்கள்
சமூக →
தொடர →
பகிர →

0 comments:

கருத்துரையிடுக

ஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்

Related Posts Plugin for WordPress, Blogger...