கடந்த 2013 - 2014 ஆம் நிதி ஆண்டில் மத்திய சாலை நிதி மற்றும் ரயில்வே நிதியில் இருந்து ₹ 40 கோடி ரூபாய் செலவில் மேம்பாலம் காட்டும் பணிகள் புதுச்சேரி 100 அடி சாலையில் தொடங்கப்பட்டது திட்டத்திட்ட 1.207 கி.மீ நீளமுடிய இந்த மேம்பாலத்தில் 0.835 கி.மீ நீளமுள்ள கிழக்கு பகுதி கட்டி முடிக்கப்பட்டு இன்று புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி அவர்களால் போக்குவரத்துக்கு திறந்து வைக்கப்பட்டது.பின்னர் அந்த மேம்பாலத்தில் முதல்வர் நாராயணசாமி தனது மகிழுந்தில் பயணம் செய்து பாலத்தை பார்வையிட்டார் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இந்த பாலத்தின் கிழக்கு பகுதி மக்கள் பயன்பாட்டுக்கு திறக்கப்பட்டதன் மூலம் கடலூரில் இருந்து புதுச்சேரி வழியாக சென்னை ,திருவண்ணாமலைக்கு போக்குவரத்து தொடங்கப்பட்டுள்ளது என தெரிவித்தார் மேலும் மற்றொரு பகுதியின் இன்னும் 4 மாத காலத்திற்குள் பணிகள் முடிக்கப்பட்டு பாதை திறக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.
0 comments:
கருத்துரையிடுக