புதுச்சேரி 100 அடி சாலையில் புதிய மேம்பால கட்டுமான பணிகள் பல ஆண்டு காலமாக நடைபெற்று வந்தது இப்பொழுது முடியும் அப்பொழுது முடியும் என எதிர்பார்க்கப்பட்ட அந்த மேம்பால கட்டுமான பணிகள் நிதிப்பற்றாக்குறை காரணமாக நீண்டுகொண்டே சென்றது. ஒருகட்டத்தில் புதுச்சேரியில் தொடர்ந்து அதிகரித்து வந்த போக்குவரத்து நெரிசல்களால் புதுச்சேரியின் ஊடகங்களாலும் பொதுமக்களாலும் இந்த மேம்பால கட்டுமான பணிகள் எப்பொழுது நிறைவடையும் என்பது குறித்த கேள்விகள் முன்வைக்கப்பட்டது.இதனையடுத்து கூடிய விரைவில் இந்த மேம்பால பணிகள் நிறைவு பெற்று மக்களின் பயன்பாட்டுக்கு வரும் என புதுச்சேரி அரசால் அறிவிக்கப்பட்டது இந்நிலையில் 28-07-2017 (வெள்ளிக்கிழமை ) இன்று ₹40 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள இந்த மேம்பாலத்தின் ஒரு பகுதியை முதல்வர் நாராயணசாமி திறந்து வைக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது இந்த மேம்பாலத்தின் ஒரு பகுதி திறக்கப்படுவதால் கடலூரில் இருந்து புதுச்சேரி வழியாக வெளியூர் செல்லும் பயணிகள் பயன் அடைவர்.
0 comments:
கருத்துரையிடுக