தகவல்களை மின்-அஞ்சலில் பெற !
karaikal ammaiyaar Karaikal lady of angel church karaikal kailasanathaar veethi ula karaikal mosque Title of image Title of image

காரைக்கால் அரசு பொது மருத்துவமனையில் அணைத்து படுக்கைகளுக்கும் கொசுவலை அமைக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் - காரைக்கால் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் ஒழிப்பு நடவடிக்கைகள்

தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பரவி வருவதாக வெளியான தகவலை அடுத்து புதுவை மாநிலம் காரைக்கால் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சலை பரப்பும் கொசுவை ஒழிக்க மாவட்ட சார்பாக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது ஆனாலும் காரைக்கால் தலைமை அரசு மருத்துவமனையின் வாசலில் இருக்கும் சாக்கடையே சரியாக சுத்தம் செய்யப்படாமல் கொசுக்கள் மண்டி இருப்பதை முகநூலில் ஒருவர் சில தினங்களுக்கு முன்பு பதிவேற்றம் செய்திருந்தார் இதனை தொடர்ந்து பொது மக்கள் மத்தியில் காரைக்கால் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் சரிவர நடைபெறுகிறதா என்ற கேள்வி எழுந்தது இந்நிலையில் 29-07-2017 (நேற்று ) அன்று காரைக்கால் அரசு பொது மருத்துவமனையில் காய்ச்சலுக்கான அனுமதிக்கப்பட்ட 48 பேரில் 34 பேர் குணமாகி வீடு திரும்பியதாகவும் மீதம் உள்ள 14 பேருக்கு டெங்கு காய்ச்சல் தொடர்பான சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் பிரபல நாளிதழின் இணையப்பக்கத்தில் செய்தி வெளியிடப்பட்டது இதனால் காரைக்கால் மக்கள் மத்தியில் டெங்கு காய்ச்சல் பீதி அதிகரித்தது.

நேற்று இது தொடர்பாக ஊடகங்களிடம் பேசிய காரைக்கால் மாவட்ட ஆட்சியர் ஆர்.கேசவன் காரைக்கால் மருத்துவமனைகளில் லேசான காய்ச்சல் என வருவோர் மற்றும் டெங்கு காய்ச்சல் அறிகுறிகளுடன் உள்ளோர் என அனைவருக்கும் இரத்தப் பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.டெங்கு காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டால் மருத்துவமனையில் உள் நோயாளியாக அனுமதிக்கப்பட்டு ,உடனடியாக சிகிச்சைகள் சிகிச்சைகள் வழங்க ஆயத்தமாக உள்ளது.காரைக்கால் அரசு பொது மருத்துவமனையில் டெங்கு காய்யச்சல் தொடர்பாக சிறப்பு பிரிவும் ஏற்படுத்தப்பட்டுள்ளது இந்த சிறப்பு பிரிவை விரிவு படுத்தவும் நடவடிக்கைகள்  எடுக்கப்படும் மேலும் அணைத்து படுக்கைகளுக்கும் கொசு வலை அமைக்கவும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது எனவும் அவர் தெரிவித்தார்.

இது தொடர்பாக செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்த அவர் காரைக்கால் அரசு பொது மருத்துவமனை டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் முழு திறனுடன் உள்ளது என தெரிவித்தார்.


டெங்குக்  காய்ச்சல் குறித்த தகவல்கள்  :
டெங்குக்  காய்ச்சல்  இது கொசுக்களால் பரவுகின்ற வைரஸ் நோய்.இதற்கு எலும்பு முறிவு காய்ச்சல் என்று இன்னொரு பெயரும் உண்டு.இது நோய் தொற்று ஏற்பட்ட ஏடிசு எகிப்து என்ற பெண் கொசு கடிப்பதால் ஏற்படுகிறது.பெரும்பாலும் டெங்கு காய்ச்சலின் அறிகுறிகள் அந்த கொசு கடித்தவுடன் தெரிவது கிடையாது அது உங்களுக்கு தெரிய வர நான்று முதல் பத்து நாட்கள் வரை ஆகும்.ஆரம்பத்தில் வெறும் காய்ச்சல் போல் காட்சியளிக்கும் இது திடீரென மிகையான காய்ச்சலாக மாறி கீழ் காணும் அறிகுறிகளுடன் விளங்கும்.

டெங்கு காய்ச்சலின்  பொதுவான அறிகுறிகள் :  1. அதிக காய்ச்சல்
  2. கடுமையான தலைவலி
  3. கண்களின் பின்பகுதியில் வலி
  4. வாந்தி மற்றும் குமட்டல்
  5. தசை மற்றும் எலும்பு வலி (உடல் வலி )
  6. உடலின் சுரபிக்களில் மாற்றம் ஏற்படுவதால் தொண்டைப் புண் ,நாவில் சுவை மாற்றம் உள்ளிட்டவை ஏற்பட வாய்ப்பு உள்ளது .
  7. தோல் தடித்து சிவப்படைந்து சினைப்பு உண்டாதல்
  8. மிதமான குருதிப்போக்கு (பல் ஈறுகளிலிருந்து குருதி வடிதல், மூக்கிலிருந்து குருதி வடிதல், மாதவிடாய் மிகைப்பு, சிறுநீரில் குருதி போதல், குருதிப்புள்ளிகள்
டெங்கு முற்றிய நிலையில் குருதிப்போக்கு காய்ச்சல் டெங்கு அதிர்ச்சி கூட்டறிகுறி என்பன உண்டாகும்.இதனை குணப்படுத்த சரியான மருந்து இது தான் என இன்னும் மருத்துவ ரீதியாக எதையும் தெரிவிக்க வில்லை.அதனால் டெங்கு காய்ச்சலை பொறுத்த வரையில் வரும் முண் காப்பதே நல்லது.
பகிர்ந்து மகிழுங்கள்
சமூக →
தொடர →
பகிர →

0 comments:

கருத்துரையிடுக

ஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்

Related Posts Plugin for WordPress, Blogger...