தகவல்களை மின்-அஞ்சலில் பெற !
karaikal ammaiyaar Karaikal lady of angel church karaikal kailasanathaar veethi ula karaikal mosque Title of image Title of image

30-07-2017 அடுத்து வரக்கூடிய வாரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வானிலை எப்படி இருக்கும் ?

தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலங்களை பொறுத்தவரையில் மழையை எதிரிபார்த்து காத்திருப்போருக்கு வரக்கூடிய வாரம் ஒரு சிறந்த வாரமாக அமையும்.தமிழகத்தில் தென்மேற்கு பருவ மழையின் தாக்கம் குறைவாக இருந்தாலும் வெப்ப சலன மழைக்கான வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.

30-07-2017 (ஞாயிற்றுக்கிழமை ) இன்று தற்பொழுது தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் மழை பெய்து கொண்டிருக்கிறது 31-07-2017 நாளையும் இதே வானிலையே தொடரும் குறிப்பாக நாளை 31-07-2017 (திங்கட்கிழமை ) அன்று தமிழகத்தின் தென் மற்றும் டெல்டா மாவட்டங்களில் குறிப்பிட்டு சொல்லும்படியான அளவு மழை பதிவாகலாம்.

01-08-2017 ( செவ்வாய்க்கிழமை ) டெல்டா மாவட்டங்களில் நல்ல மழைக்கு வாய்ப்புண்டு.

02-08-2017 (புதன்கிழமை ) மற்றும் 03-08-2017 (வியாழக்கிழமை ) ஆகிய தேதிகளில் தமிழகத்தில் மழையின் அளவு சற்று குறைவது போல் தோன்றினாலும் 04-08-2017 (வெள்ளிக்கிழமை ) கேரள மற்றும் கர்நாடக எல்லையை ஒட்டியுள்ள தமிழக பகுதிகளிலும் ஒரு சில உள் மாவட்டங்களிலும் மழையின் அளவு லேசாக அதிகரிக்க தொடங்கும்.

02-08-2017 ,03-08-2017 மற்றும் 04-08-2017 ஆகிய தேதிகளில் தமிழகத்தின் வட கிழக்கு மற்றும் உள் மாவட்டங்களில் உள்ள பகுதிகளில் பகல்நேரத்தில் 1° முதல் 3° செல்ஸியஸ் வரை வெப்பம் உயர்ந்து காணப்படலாம்.

05-08-2017 (சனிக்கிழமை )  முதல் தமிழகத்தில் மீண்டும் வெப்ப சலன மழையின் அளவு அதிகரிக்க தொடங்கும்.
பகிர்ந்து மகிழுங்கள்
சமூக →
தொடர →
பகிர →

0 comments:

கருத்துரையிடுக

ஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்

Related Posts Plugin for WordPress, Blogger...