தகவல்களை மின்-அஞ்சலில் பெற !
karaikal ammaiyaar Karaikal lady of angel church karaikal kailasanathaar veethi ula karaikal mosque Title of image Title of image

காங்கிரஸ் ஆட்சியில் 3 பாஜக நியமன எம்.எல்.ஏ க்கள் - புதுச்சேரி அரசியலில் மீண்டும் பரபரப்பு - ஆளுநரின் உத்தரவுக்கு எதிராக காங்கிரஸ் திமுக மற்றும் அதிமுக எம்.எல்.ஏ க்கள்

புதுச்சேரியில் முன்னாள் மத்திய அமைச்சரும்  தற்போதைய முதலமைச்சருமான நாராயண்சாமி தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது.புதுச்சேரி ,காரைக்கால் ,மாஹீ ,ஏனாம் என 4 பிராந்தியங்களைக் கொண்ட புதுச்சேரி யூனியன் பிரேதேசத்தில் மொத்தம் 30 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன கடந்த 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலின் முடிவில் அதிகபட்சமாக காங்கிரஸ் கட்சியானது 15 இடங்களில் வெற்றிபெற்றது இதற்கு அடுத்தபடியாக ரங்கசாமி தலைமையிலான அகில இந்திய என்.ஆர்.காங்கிரஸ் - 8 இடங்களிலும் அதிமுக - 4 இடங்களிலும் திமுக - 2 இடங்களிலும் வெற்றிபெற்று இருந்தது இதனையடுத்து தற்பொழுது புதுச்சேரியில் காங்கிரஸ் - திமுக கூட்டணியில் காங்கிரஸ் தலைமையில் ஆட்சி நடைபெற்று வருகிறது இந்த 30 எம்.எல்.ஏ க்கள் இல்லாமல் சட்ட விதிகளின் படி அரசுக்கு ஆலோசனை வழங்க 3 நியமன எம்.எல்.ஏ க்களை மத்திய அரசின் அனுமதியுடன் நியமித்துக்கொள்ளலாம் பெரும்பாலும் மாநிலத்தில் ஆட்சி செய்யும் அரசே நியமன எம்.எல்.ஏ க்களின் பெயரை பரிந்துரை செய்யும் தற்பொழுது புதுச்சேரியின் துணை நிலை ஆளுநருக்கும் ஆளும் காங்கிரஸ் அரசுக்குமான உறவு சுமுகமாக இல்லை எனபது சமீபத்தில் நடைபெற்ற அடுக்கடுக்கான நிகழ்வுகளால் தெரிந்துகொள்ளலாம்.இந்நிலையில் புதுவை மாநில பாஜக தலைவர் சாமிநாதன் ,பொருளாளர் சங்கர் ,தனியார் கல்வி நிறுவன தாளாளர் செல்வகணபதி உட்பட பாஜகவை சார்ந்த 3 நபர்களை நியமின எம்.எல்.ஏ க்களாக நியமிக்க ஆளுநர் கிரண்பேடி மத்திய அரசுக்கு பரிந்துரை செய்தார் இதனையடுத்து மத்திய உள்துறை அமைச்சகம் இந்த பரிந்துரைக்கு அனுமதி வழங்கி உத்தரவு பிறப்பித்துள்ளது.மத்திய அரசின் இந்த நடவடிக்கை புதுச்சேரி அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது இதனால் புதுவையில் காங்கிரஸ் ,திமுக மற்றும் அதிமுக எம்.எல்.ஏ க்கள் அதிருப்தியில் உள்ளதாகவும் கூறப்படுகிறது.

முன்னதாக மாநில அரசின் அனுமதி இன்றி மத்திய அரசே நியமன எம்.எல்.ஏ க்களை நியமிக்க தடை விதிக்கக்கோரி கடந்த வாரம் முன்னாள் அமைச்சர் லட்சுமி நாராயணன் மூலம் வழக்கு தொடுக்கப்பட்டது இந்த வழக்கு சென்னை உயநீதிமன்றத்தில் நீதிபதி இந்திரா பானர்ஜி தலைமையிலான அமர்வு முன் விசாரணைக்கு வந்தது ஆனால் நியமன எம்.எல்.ஏ க்களை நியமிக்கும் விவகாரத்தில் தடை விதிக்க மறுக்கப்பட்டது மேலும் இது தொடர்பாக மத்திய அரசு விளக்கமளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையானது 05-07-2017 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

மாநில அரசின் அனுமதியின்றி 3 பேரை நியமன எம்.எல்.ஏ க்களாக நியமிக்க பரிந்துரை செய்த புதுவை துணை நிலை ஆளுநர் கிரண்பேடியின் நடவடிக்கைக்கு புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ் தவிர ஆளும் காங்கிரஸ் ,திமுக ,அதிமுக என அணைத்து கட்சி எம்.எல்.ஏ க்களும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.


பகிர்ந்து மகிழுங்கள்
சமூக →
தொடர →
பகிர →

0 comments:

கருத்துரையிடுக

ஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்

Related Posts Plugin for WordPress, Blogger...