தமிழகத்தின் முக்கிய கடலோர மாவட்டங்களான நாகப்பட்டினம் மற்றும் கடலூர் மாவட்டத்தில் உள்ள 45 கிராமங்களில் பெட்ரோகெமிக்கல் மண்டலம் அமைக்கப்பட உள்ளதாக தமிழக அரசு அரசிதழில் அண்மையில் வெளியுட்டுள்ளது அதுமட்டுமல்லாமல் 45 கிராமங்களில் இருந்து கையகப்படுத்தப்பட இருக்கும் 57,345 ஏக்கர் நிலத்தை இணைத்து புதிய நகரியம் அமைக்கப்படும் எனவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது மேலும் அந்த புதிய நகரியத்துக்கு உறுப்பினர் மற்றும் செயலர் நிலையில் ஓர் அதிகாரி அமர்த்தப்படுவார் என்றும், அங்கு அமைக்கப்படவுள்ள பெட்ரோலியம், இரசாயனம் மற்றும் பெட்ரோக்கெமிக்கல் சார்ந்த அனைத்து தொழில்களுக்கும் உறுப்பினர் செயலரே அனுமதி அளிப்பார் எனவும் அறிவித்துள்ளது.
என்ன காரணமோ தெரியவில்லை மத்திய அரசின் இத்திட்டத்தை தமிழகத்தில் செயல்படுத்த மாநில அரசு முனைப்புக் காட்டி வருகிறது ஆனால் நாகை மற்றும் கடலூர் மாவட்ட மக்களிடம் இத்திட்டம் குறித்து அவர்களின் கருத்தை கேட்டோமேயானால் அவர்களின் கண்களில் இனம் புரியாத ஒரு பதற்றத்தை தான் நம்மால் காண முடிகிறது.30 ஆண்டுகளுக்கு முன் கடலூர் - சிதம்பரம் இடையே இயற்கை எழில் கொஞ்சும் பகுதிகளாக இருந்த இடங்களெல்லாம் சிப்காட் ( SIPCOT ) இன் வருகைக்கு பிறகு காணமல் போய்விட்டன.தற்பொழுது மக்கள் வாழ தகுதியற்ற இடமாக அந்த பகுதிகள் மாறிவிட்டன பிறந்த குழந்தை உண்ணும் தாய்ப்பாலில் தீங்கு விளைவிக்கக் கூடிய கனிமங்களின் கலவை தென்படுகின்றன இவையெல்லாம் இயற்கைக்கு எதிரானவை இந்நிலையில் இந்த புதிய பெட்ரோகெமிக்கல் திட்டம் இயற்கைக்கு எதிராக செயல்படுத்தப்பட்டு என்னென்ன பிரச்சனைகளை கொண்டுவரப் போகிறதோ என்ற பயம் தான் அவர்களின் கண்களில் நாம் காணும் பதற்றத்திற்கு காரணமோ என்று தோன்றுகிறது. இன்னும் ஒரு சிலருக்கு இத்திட்டம் அங்கு வருவது குறித்து எந்த ஒரு தகவலும் தெரியவில்லை.
நாகப்பட்டினம் மாவட்டத்தை பொறுத்தவரை ஏற்கனவே விவசாயம் முழுவதுமாக நீர்த்து போய்விட்டது பெரும்பாலான விவசாய நிலங்களுக்கு கீழே எண்ணெய் குழாய்கள் தான் புதைக்கப்பட்டு உள்ளன.தரங்கம்பாடி அருகே இருக்கும் திருக்கடையூர் போன்ற பகுதிகளெல்லாம் மணல் சாரி என்று சொல்லக்கூடிய மண்வளமிக்க பகுதிகள் இந்த புதிய திட்டத்தால் அந்த பகுதிகளும் பாதிப்புக்கு உள்ளாக கூடிய நிலை ஏற்படும் என அப்பகுதி மக்கள் தங்களது அச்சத்தை தெரிவித்து வருகின்றனர்.30 ஆண்டுகளுக்கு முன்பே மீன் வளமும் ,நில வளமும் ஒரு சேர இருந்த நாகை மாவட்டம் தஞ்சை தரணியின் நெற்களஞ்சியமாக திகழ்ந்தது ஆனால் விவசாய நிலங்களுக்கு கீழே எண்ணெய் குழாய்கள் புதைக்கப்பட்ட பிறகு அங்கே மிஞ்சி நிர்ப்பது வறட்சி மட்டுமே.ஏற்கனவே காரைக்கால் மாவட்டம் வாஞ்சூர் பகுதியில் இயங்கிவரும் தனியார் துறைமுகத்தின் நிலக்கரி இறக்குமதியால் கடும் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கும் நாகூர் பகுதி மக்கள் இத்திட்டத்தை கடுமையாக எதிரித்து வருகின்றனர்.
கடலூர் மற்றும் நாகை மாவட்டத்தில் முதல் கட்டமாக நிலம் கையகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ள இடங்கள்
கடலூர் மாவட்டம் கடலூர் தாலுக்கா: திருச்சோபுரம், கம்பளிமேடு, ஆலப்பாக்கம், காயல்பட்டு, ஆண்டார்முள்ளிப்பள்ளம்,
கடலூர் மாவட்டம் புவனகிரி தாலுக்கா: பெரியப்பட்டு, சிலம்பிமங்களம், வில்லியநல்லூர், கொத்தட்டை, சின்னகொமட்டி, அரியகோஷ்டி, பெரியகொமட்டி, முட்லூர், அகரம், பரங்கிப்பேட்டை
கடலூர் மாவட்டம் சிதம்பரம் தாலுக்கா: மேல் அனுவம்பட்டு, தில்லைநாயகபுரம், பள்ளிப்படை, கொத்தன்குடி, உசுப்பூர், கடவாச்சேரி, வல்லம்படுகை, கீழ் அனுவம்பட்டு, புஞ்சைமகத்து வாழ்க்கை, மடுவன்கரை,
நாகை மாவட்டம் சீர்காழி தாலுக்கா: அகரவட்டாரம், வேட்டங்குடி, திருமுல்லைவாசல், ராதாநல்லூர், எடமணல், திருநகரி, நெய்பத்தூர், தென்னம்பட்டினம், பெருந்தோட்டம், அகரப்பெருந்தோட்டம், திருவெண்காடு, மணிகிராமம், மேலையூர், திருமைலாடி, மாதானம், குட்டியம்பேட்டை, பனங்குடி,
நாகை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா: மேலப்பெரும்பள்ளம், மாமாகுடி
இந்திய நாட்டின் இரு மாநிலங்கள் எங்களுக்கு இந்த திட்டம் வேண்டாம் என்று நிராகரித்த ஒரு திட்டத்தை தமிழகத்தில் இப்பொழுது இருக்கும் அசாதாரணமான அரசியல் சூழலை பயன்படுத்தி தமிழகத்தில் திணிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது இத்திட்டம் குறித்த எந்த ஒரு புரிந்துணர்வும் இல்லாமலேயே வெறும் அரசியல் காரணங்களுக்காக மத்திய அரசின் இத்திட்டத்தை தமிழகத்தில் செயல்படுத்த மாநில அரசு முனைப்பு காட்டி வருவதாகவும் சமூக ஆர்வலர்கள் தெரிவித்து வருகின்றனர்.

0 comments:
கருத்துரையிடுக