தகவல்களை மின்-அஞ்சலில் பெற !
karaikal ammaiyaar Karaikal lady of angel church karaikal kailasanathaar veethi ula karaikal mosque Title of image Title of image

இரவில் ரகசியமாக நியமன எம்.எல்.ஏ க்களுக்கு பதவி பிரமாணம் செய்து வைத்த துணை நிலை ஆளுநர் கிரண்பேடி

புதுவையில் ஆளும் காங்கிரஸ் ஆட்சியின் ஆலோசனை இன்றி பாஜக வை சார்ந்த 3 நபர்களை நியமன எம்.எல்.ஏ க்களாக நியமிக்க புதுவை மாநில துணை நிலை ஆளுநர் கிரண்பேடி மத்திய அரசுக்கு பரிந்துரை செய்ததாக கூறப்பட்டது வந்தது இந்நிலையில் அது உண்மை என்பது போல புதுவை மாநில பாஜக சட்டப்பேரவை தலைவர் சுவாமிநாதன் ,பொருளாளர் சங்கர் மற்றும் தனியார் பள்ளி தாளாளர் செல்வகணபதி ஆகியோரை நியமன எம்.எல்.ஏ க்களாக நியமித்து நேற்று முன்தினம் அதாவது 03-07-2017 அன்று மத்திய உள் துறை அமைச்சகம் உத்தரவு  பிறப்பித்தது இதனையடுத்து அந்த மூன்று பேரும் தலைமை செயலாளர் மற்றும் சபாநாயகரை சந்தித்து பதவி பிரமாணம் செய்து வைக்குமாறு தெரிவித்தனர் நியமன எம்.எல்.ஏ க்கள் நியமிக்கப்பட்டது தொடர்பாக மாநில அரசு அரசாணை வெளியிட்டால் மட்டுமே பதவி பிரமாணம் செய்து வைக்க முடியும் என சபாநாயகர் தெரிவித்ததாக கூறப்படுகிறது இந்நிலையில் 04-07-2017 (நேற்று ) அன்று இரவு 8:00 மணியளவில் சட்டப்பிரிவு 1963 கீழ் ஆளுநர் கிரண்பேடி ரகசியமாக மூன்று நியமன எம்.எல்.ஏ க்களுக்கும் பதிவு பிரமாணம் செய்து வைத்துள்ளார்.துணை ஆளுநரே நியமன எம்.எல்.ஏ க்களுக்கு நேரடியாக பதவி பிரமாணம் செய்து வாய்த்த இச்சம்பவம் புதுச்சேரி அரசியலில் மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது என்று சொன்னால் அது மிகையாகாது.


பகிர்ந்து மகிழுங்கள்
சமூக →
தொடர →
பகிர →

0 comments:

கருத்துரையிடுக

ஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்

Related Posts Plugin for WordPress, Blogger...