தகவல்களை மின்-அஞ்சலில் பெற !
karaikal ammaiyaar Karaikal lady of angel church karaikal kailasanathaar veethi ula karaikal mosque Title of image Title of image

முதல்முறையாக தமிழகத்தில் ஜிகா வைரஸ் - கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பதற்றம் - ஜிகா வைரஸின் ஆரம்ப கால அறிகுறிகள் யாவை?

10-07-2017 தமிழகத்திலேயே முதல் முறையாக கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை  தாலுகாவை சார்ந்த அஞ்சட்டி அடுத்த  நாட்றாம்பாளையத்தில் 27 வயது இளைஞர் ஒருவருக்கு ஜிகா வைரஸ் நோய்க்கான அறிகுறிகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.தொடர்ந்து காய்ச்சலால் தவித்து வந்த அந்த இளைஞரின் ரத்த மாதிரிகளை ஆய்வு செய்ததில் அவருக்கு டெங்கு ,சிக்கன் குனியா போன்ற நோய்கள் இல்லை என்பது தெளிவானது அதன் பிறகு அவருடைய ரத்த மாதிரி மற்றும் சிறுநீரை புனேவில் உள்ள ஆய்வகத்துக்கு பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனராம்.புனேவில் மேற்கொண்ட ஆய்வுகளுக்கு பிறகு அந்த இளைஞருக்கு ஜிகா வைரஸ் தோற்று இருப்பதற்கான அறிகுறிகள் தென்படுவதாக தெரியவந்தது.இதனையடுத்து அதே கிராமத்தை சார்ந்த காய்ச்சலால் அவதிப்பட்ட 4 நபர்களின் ரத்த மாதிரியும் புனேவுக்கு அனுப்பப்பட்டதாம் ஆனால் அவர்களுக்கு ஜிகா வைரஸுக்கான அறிகுறிகள் இல்லையாம்.ஆனாலும் தற்பொழுது நாட்றாம்பாளையத்தில் 16 மருத்துவர்கள் அடங்கிய 8 குழுக்கள் அப்பகுதியில் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இருப்பவர்களுக்கு சிகிச்சைகள் அளித்து வருகிறதாம்.

கடந்த ஆண்டு அமெரிக்கா போன்ற வளர்ச்சி அடைந்த நாடுகளையே அதிர்ச்சிக்குள்ளாகிய ஜிகா வைரஸ் தற்பொழுது தமிழகத்தில் உள்ள ஒரு இளைஞரிடம் இருப்பதாக கண்டறியப்பட்டு இருப்பது தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.மேலும் ஜிகா வைரஸ் செய்தி கிருஷ்ணகிரி மாவட்ட மக்களிடத்தில் ஒரு வகையான பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது என்று சொன்னால் அது மிகையாகாது.

ஜிகா வைரஸின் (Zika Virus ) அறிகுறிகள்  : 


ஏடிசு கொசுக்கள் கடித்த 2 முதல் 7 நாட்களில் கீழ்காணும் அறிகுறிகள் தென்படும்.

 • காய்ச்சல் (குறைந்த அளவிலான காய்ச்சல் )
 • தலைவலி 
 • தசைவலி
 • மூட்டுவலி
 • எலும்புகளில் வலி
 • தோலில் அரிப்பு
 • கண்கள் சிகப்பு நிறமாக மாறுதல்
 • உடல் சோர்வு

திட்டத்திட்ட  டெங்கு காய்ச்சலுக்கான அறிகுறிகள் போன்று தான் இருக்கும் ஆனால் அதை விட மென்மையானதாக இருக்கும் அதனால் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.


ஜிகா வைரஸில்  (Zika Virus ) இருந்து எப்படி விடுபடுவது ?

 இது வரையில் ஜிகா வைரஸில் இருந்து விடுபட ஒரு குறிப்பிட்ட மருந்து கண்டுபிடித்திருப்பதாக தெரியவில்லை.

 • மேற்கணட அறிகுறிகள் தென்பட்டால் மருத்துவரை உடனே அணுக வேண்டும்
 • நிறைய ஓய்வு எடுத்துக்கொள்ளுங்கள் 
 • தொடர்ந்து காய்ச்சலை குறைப்பதற்கான மருந்துக்களை  எடுத்துக் கொள்ளவேண்டும் .
 • உடலில் நீரிழப்பு ஏற்படாமல் இருக்க நிறைய நீர் அருந்த வேண்டும்

பகிர்ந்து மகிழுங்கள்
சமூக →
தொடர →
பகிர →

0 comments:

கருத்துரையிடுக

ஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்

Related Posts Plugin for WordPress, Blogger...