தகவல்களை மின்-அஞ்சலில் பெற !
karaikal ammaiyaar Karaikal lady of angel church karaikal kailasanathaar veethi ula karaikal mosque Title of image Title of image

1964 ஆம் ஆண்டுக்கு பிறகு தனுஷ்கோடியில் புதிய சாலை -சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி - முகுந்தராயர்சத்திரம் கடற்கரை முதல் அரிச்சல்முனை கடற்கரை வரை ஒன்பதரை கிலோமீட்டர் தொலைவுக்கு புதிய தார் சாலை

55 ஆண்டுகளுக்கு முன்னாள் தமிழகத்தின் தென்கோடியில் முக்கிய வியாபார ஸ்தலமாகவும் ,தொழில் நகரமாகவும் விளங்கிய தனஷ்கோடி 1964 ஆம் ஆண்டு வங்கக்கடலில் உருவாகிய கடும் புயலின் கோரப்பிடியில் சிக்கி முற்றிலும் அழிந்து போனது ஒரு காலத்தில் இலங்கையுடன் வர்த்தக தொடர்பில் இருந்த வந்த தனஷ்கோடியை கடல் விழுங்கியது என்று கூட சொல்லப்படுவது உண்டு.அந்த புயலுக்கு பிறகு அங்கிருந்த ரயில் நிலையம் ,தபால் நிலையம் ,மக்கள் குடியிருப்பு பகுதிகள் என அனைத்தும் சிதைந்து போய்விட்டன .பின்னர் அங்கிருந்த கொஞ்சம் மக்களும்  வாழ அஞ்சி தனுஷ்கோடியை விட்டு வெளியேறிவிட்டனர்.மக்கள் வாழ அஞ்சி வெளியேறிய பகுதியாக இருந்தாலும் சமீப காலங்களில் தனுஷ்கோடியை பார்வையிட வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வந்தது.தென்கோடியில் அழிந்து போன ஒரு வியாபார நகரத்தில் மிஞ்சியிருக்கும் சுவடுகளை காண இந்தியாவின் வட கோடியில் இருந்தும் மக்கள் வர தொடங்கினர் ஆனால் அப்படி வெளியூர்களில் இருந்து வரும் சுற்றுலா பயணிகளால்  ராமேஸ்வரத்தில் இருந்து முகுந்தராயர்சத்திரம் கடற்கரை வரை மட்டுமே தங்களது வாகனங்களால் செல்ல முடிந்தது அதன் பிறகு அரிச்சல்முனை கடற்கரை வரை உள்ள ஒன்பதரை கிலோமீட்டர் தொலைவை மக்கள் நடந்தே கடக்க வேண்டிய நிலை இருந்தது  பின்னர் குறைந்த அளவு நீரில் செல்லக்கூடிய வானங்களின் உதவியுடன் மக்கள் தனஷ்கோடியை பார்வையிட்டனர்.இயற்கையின் சக்திக்கு முன்னாள் மனிதர்களாகிய நாம் ஒன்றுமே இல்லை என்ற உன்னத தத்துவத்தை அழிந்து போன இந்நகரத்தின் எஞ்சி நிற்கும் பகுதிகள் உணர்த்துவதாக  இங்கு வரும் சுற்றுலா பயணிகள் தெரிவிக்கின்றனர்.

1964 ஆம் ஆண்டுக்கு பிறகு கடந்த 2015 ஆம் ஆண்டு ₹71 கோடி செலவில் முகுந்தராயர்சத்திரம் கடற்கரை  முதல் அரிச்சல்முனை கடற்கரை வரை உள்ள ஒன்பதரை கிலோமீட்டர் தொலைவுக்கு புதிய சாலை அமைக்கும்  பணிகள் தொடங்கப்பட்டது.இதனையடுத்து கடந்த 27-07-2017 அன்று மறைந்த முன்னாள் குடியரசு தலைவர் டாக்டர் ஏ.பி.ஜெ.அப்துல்கலாம் அவர்களின் நினைவு மண்டபத்தை திறந்து வைக்க வந்த பாரத பிரதமர் மோடி புதிதாக கட்டப்பட்டு இருந்த அரிச்சல்முனை வரையிலான சாலையையும் காணொளி மூலம் மக்கள் பயன்பாட்டுக்காக  திறந்து வைத்தார்.இந்த புதிய சாலையால் சுற்றுலா பயணிகள் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் மேலும் ராமேஸ்வரம் பேருந்து நிலையத்தில் இருந்து 45 நிமிடங்களுக்கு ஒரு முறை தனுஷ்கோடிக்கு பேருந்தும் இயக்கப்படுகிறது என்பது கூடுதல் தகவல்.


பகிர்ந்து மகிழுங்கள்
சமூக →
தொடர →
பகிர →

0 comments:

கருத்துரையிடுக

ஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்

Related Posts Plugin for WordPress, Blogger...