தகவல்களை மின்-அஞ்சலில் பெற !
karaikal ammaiyaar Karaikal lady of angel church karaikal kailasanathaar veethi ula karaikal mosque Title of image Title of image

ஜிகா வைரஸ் தடுப்பு நடவடிக்கை - மாவட்ட ஆட்சியர் தலைமையில் வீடு வீடாக சென்று ஆய்வு மேற்கொள்ளும் சுகாதார துறையினர்

கடந்த சில தினங்களுக்கு முன் கிருஷ்ணகிரி மாவட்டம் தேங்கனி கோட்டை தாலுகாவை சார்ந்த நாட்றாம்பாளையத்தில்  இளைஞர் ஒருவர் ஜிகா வைரஸ் தாக்குதலுக்கு உள்ளாகி இருப்பது உறுதி செய்யப்பட்டது இதனையடுத்து நாட்றாம்பாளையம் ஊராட்சியில் கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் தலைமையில் சுகாதார குழு அமைத்து வேறு யாருக்கேனும் ஜிகா வைரஸ் தாக்குதல் உள்ளதா என வீடு வீடாக சென்று ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறதாம்.

ஜிகா வைரஸின் (Zika Virus ) அறிகுறிகள்  : 


ஏடிசு கொசுக்கள் கடித்த 2 முதல் 7 நாட்களில் கீழ்காணும் அறிகுறிகள் தென்படும்.


  • காய்ச்சல் (குறைந்த அளவிலான காய்ச்சல் )
  • தலைவலி 
  • தசைவலி
  • மூட்டுவலி
  • எலும்புகளில் வலி
  • தோலில் அரிப்பு
  • கண்கள் சிகப்பு நிறமாக மாறுதல்
  • உடல் சோர்வு

திட்டத்திட்ட  டெங்கு காய்ச்சலுக்கான அறிகுறிகள் போன்று தான் இருக்கும் ஆனால் அதை விட மென்மையானதாக இருக்கும் அதனால் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.


ஜிகா வைரஸில்  (Zika Virus ) இருந்து எப்படி விடுபடுவது ?

 இது வரையில் ஜிகா வைரஸில் இருந்து விடுபட ஒரு குறிப்பிட்ட மருந்து கண்டுபிடித்திருப்பதாக தெரியவில்லை.

  • மேற்கணட அறிகுறிகள் தென்பட்டால் மருத்துவரை உடனே அணுக வேண்டும்
  • நிறைய ஓய்வு எடுத்துக்கொள்ளுங்கள் 
  • தொடர்ந்து காய்ச்சலை குறைப்பதற்கான மருந்துக்களை  எடுத்துக் கொள்ளவேண்டும் .
  • உடலில் நீரிழப்பு ஏற்படாமல் இருக்க நிறைய நீர் அருந்த வேண்டும்
 ஜிகா வைரஸ் தாக்குதலில் இருந்து எப்படி தப்பிப்பது 


  • ஜிகா வைரஸ் பெரும்பாலும் நோய் தோற்று ஏற்பட்ட கொசுக்கள் கடிப்பதால் தான் பரப்பப்படுகிறது அதனால் முடிந்த வரையில் கொசுக்கடியில் இருந்து நம்மை நாமே பாதுகாத்துக் கொள்வது நல்லது.
  • வீட்டில் வீணாக தண்ணீர் தேங்கி நிற்பதை தடுக்க வேண்டும்
  • நாம் வாழும் வீட்டை சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும்
  • பெரும்பாலும் பகலில் கடிக்கும் கொசுக்கள் தான் ஜிகா வைரஸை அதிகம் பரப்புகின்றன என நம்பப்படுகிறது ஆனால் இரவில் கடிக்கும் கொசுக்களாலும் ஜிகா வைரஸ் புறப்படுகிறது.
  • ஜிகா வைரஸ் தாக்குதளுக்கு உள்ளாகியிருக்கும் நபருடன் உடலுறுவு கொள்ளும்போதும் இந்த நோய் பரவுகிறது.


பகிர்ந்து மகிழுங்கள்
சமூக →
தொடர →
பகிர →

0 comments:

கருத்துரையிடுக

ஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்

Related Posts Plugin for WordPress, Blogger...