தகவல்களை மின்-அஞ்சலில் பெற !
karaikal ammaiyaar Karaikal lady of angel church karaikal kailasanathaar veethi ula karaikal mosque Title of image Title of image

இந்தியாவின் இரும்புப் பெண்மணிக்கு கொடைக்கானலில் இன்னும் 30 நாட்களில் திருமணமாம்

இருப்புப் பெண்மணி என அனைவராலும் அழைக்கப்படும் இரோம் ஷர்மிளா இந்தியாவின் மணிப்பூர் மாநிலத்தை சேர்ந்தவர்.கடந்த 2000ஆம் ஆண்டு நவம்பர் 5 ஆம் தேதி முதல் (05-11-2000) 2016 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 9ஆம் தேதி (09-08-2016) வரை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டவர்.உலகின் மிக அதிகமான நாட்கள் உண்ணாவிரதம் மேற்கொண்டவர் என்ற பெருமைக்கு உரியவர் திட்டத்திட்ட 16 ஆண்டுகள் என்னது 16 ஆண்டுகள் உண்ணாவிரதம் இருந்தாரா ? அப்படியானால் 16 ஆண்டுகள் உணவு உண்ணாமல் வாழ முடியுமா ? என்று ஆர்வத்தில் கேள்வி எழுப்பாதீர்கள் அவர் 16 ஆண்டுகள் உணவையும் நீரையும் வாய்வழியாக உண்ணவில்லை இவர் இறந்து விட கூடாது என்பதற்காக மணிப்பூர் அரசு குழாய் வழியாக இவரின் மூக்கின் துவாரங்களில் துளையிட்டு உணவையும் தண்ணீரையும் வழங்கி வந்தது திட்டத்திட்ட 16 ஆண்டுகள் வாயில் உணவும் நீரும் படாமலேயே தனது இளமை காலத்தை கழித்தவர் அதனால் தான் அவரை இரும்புப் பெண்மணி என்று அழைக்கிறார்கள்.2014 ஆம் ஆண்டு மங்கையர் தினத்தன்று இந்தியாவின் பிரபலமான பெண்மணியாக வாக்களிக்கப்பட்டு தேர்ந்தெடுக்கப்பட்டவர்.

1972 ஆம் ஆண்டு பிறந்த இரோம் ஷர்மிளாவுக்கும் இப்பொழுது 45 வயதாகிறது இளமை காலம் முழுவதையும் போராட்டத்திலேயே கழித்த அவருக்கு கடந்த சட்டமன்ற தேர்தலின் பொழுது மக்கள் ஆதரவு தரவில்லை அவருக்கே வெறும் 90 வாக்குகள் தான் கிட்டின அதனால் மனமுடைந்த இரோம் ஷர்மிளா மணிப்பூரை விட்டு வெளியேறி தற்பொழுது தனது  அயர்லாந்து காதலருடன் தமிழகத்தில் கொடைக்கானலில் தங்கியிருக்கிறார் .இன்று கொடைக்கானல் திருமண பதிவு அலுவலகத்துக்கு தனது காதலருடன் வருகைதந்த இரோம் ஷர்மிளா திருமணத்துக்கான விண்ணப்பத்தை பூர்த்தி செய்து பதிவாளரிடம் வழங்கினார் அதனை ஏற்றுக்கொண்ட அதிகாரிகள்  அவருக்கு 30 நாட்கள் அனுமதி காலம் வழங்கியுள்ளனர் எவரும் எதிர்ப்பு தெரிவிக்காத பட்சத்தில் இன்னும் 30 நாட்களில் இந்தியாவின் இரும்புப் பெண்மணி இரோம் ஷர்மிளாவுக்கு கொடைக்கானலில் திருமணம் நடக்க இருக்கிறது.


பகிர்ந்து மகிழுங்கள்
சமூக →
தொடர →
பகிர →

0 comments:

கருத்துரையிடுக

ஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்

Related Posts Plugin for WordPress, Blogger...