தகவல்களை மின்-அஞ்சலில் பெற !
karaikal ammaiyaar Karaikal lady of angel church karaikal kailasanathaar veethi ula karaikal mosque Title of image Title of image

2018 ஜூன் அல்லது ஜூலை மாதத்தில் காரைக்கால் விமான நிலையம் செயல்பாட்டுக்கு வரும் - காரைக்கால் ஏர்போட் நிறுவன தலைவர்

காரைக்கால் மாவட்ட ஆட்சியரை நேற்று சந்தித்து காரைக்கால் விமான நிலையம் குறித்த திட்டப் பணிகளை விளக்கிய காரைக்கால் ஏர்போர்ட் நிறுவன தலைவர் ஜெ.வி. சௌத்ரி பின்னர் செய்தியாளர்களின் சந்திப்பில் விமான ஓடுதளம் அமைக்க தேவையான 60 ஏக்கர் நிலத்தில் 45 ஏக்கர் நிலம் தயாராக உள்ளது எனவும் மீதமுள்ள 15 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்தும் திட்டம் இன்னும் ஒரு மாத  காலத்தில் நிறைவுபெறும் எனவும் தெரிவித்தார் நிலம் கையகப்படுத்தப்பட்டவுடன் சிறிய விமானதுக்கான ஓடுதளம் அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்படும் எனவும் மேலும் காரைக்கால் ஏர்போர்ட் நிறுவனம் முதல் கட்டமாக ஏர்டெக்கான் ,ஏர் ஒடிசா போன்ற 18 முதல் 19 இருக்கைகள் கொண்ட சிறிய ரக விமானங்களை இயக்க திட்டமிட்டுள்ளது எனவும் இவை சுமார் 700 கிலோ மீட்டர் தொலைவு வரை பயணிக்ககூடியவை என்றும் தெரிவித்தார்.

நவீன தகவல் தொழிநுட்ப அடிப்படையில் நாட்டிலேயே சிறிய அளவில் குறுகிய நேரத்தில் பயணிகள் அதிக வசதிகளை பெறக்கூடிய அழகிய விமான நிலையமாக இதனை உருவாக்க திட்டமிட்டு உள்ளோம் என்றும்  ஓடுதளம் மற்றும் விமான நிலைய முனைய அமைப்பு ஆகியவையை  வருகின்ற 2018 ஆம் ஆண்டு ஜூன் அல்லது ஜூலை மாதத்துக்குள் முடித்து விமான நிலையத்தை செயல்பாட்டுக்கு கொண்டு வர உத்தேசிக்கப் பட்டுள்ளது எனவும் அவர் தெரிவித்தார்.

காரைக்கால் மாவட்டத்தில் திருநள்ளாறு சனீஸ்வரன் கோயில் ,ஜிப்மர் மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனை ,என்.ஐ.டி போன்ற உயர் கல்வி நிலையங்கள் ஓ.என்.ஜி.சி போன்ற பொதுத்துறை நிறுவனங்கள் மார்க் தனியார் துறைமுகம் உள்ளிட்டவைகள் இருப்பதாலும் காரைக்கால் மாவட்டத்துக்கு மிக அருகில் நாகூர் ,வேளாங்கண்ணி ,திருக்கடையூர் போன்ற வழிபாட்டு தளங்கள் அமைத்திருப்பதாலும் காரைக்கால் விமான நிலையம் நல்ல வரவேற்பை பெரும் என நம்புகிறோம் என்று  அவர் தெரிவித்தார்.


பகிர்ந்து மகிழுங்கள்
சமூக →
தொடர →
பகிர →

2 comments:

Related Posts Plugin for WordPress, Blogger...