தகவல்களை மின்-அஞ்சலில் பெற !
karaikal ammaiyaar Karaikal lady of angel church karaikal kailasanathaar veethi ula karaikal mosque Title of image Title of image

அரசு மக்களின் வாழ்வாதாரத்திற்கு துணை நிற்க வேண்டுமே தவிர மதுபான வியாபாரிகளுக்கு அடிமையாகிவிடக் கூடாது - மக்கள் வாழும் பகுதிகளில் இருக்கும் மதுக்கடைகளை அகற்றக்கோரி காரைக்கால் தெற்குத்தொகுதி எம்.எல்.ஏ மாவட்ட ஆட்சியரிடம் மனு.

நாடெங்கிலும் தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் இயங்கிவந்த மதுக்கடைகளை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என்று உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பையடுத்து காரைக்கால் மற்றும் புதுச்சேரியில் பல ஆண்டு காலமாக இயங்கிவந்த பல மதுக்கடைகள் மூடப்பட்டன இதனையடுத்து காரைக்கால் கடற்கரைக்கு அருகே இருந்த ஒரு மதுக்கடையில் வியாபாரம் முன் இல்லாத அளவு களைகட்டியது.வெளியூர்களில் இருந்தெல்லாம் மதுப்பிரியர்கள் காரைக்கால் கடற்கரையில் அமைத்திருக்கும் இந்த மதுக்கடைக்கு  படையெடுக்க தொடங்கினர் இதனையடுத்து அந்த மதுக்கடையின் உரியமையாளர் மதுக்கடை விரிவாக்க பணிகளையும் மேற்கொண்டார் அதன் பிறகு அதே சாலையில் மேலும் இரண்டு மதுக்கடைகள் திறக்கப்பட்டன காரைக்காலில் சில ஆண்டுகளாக தொய்வு கண்டிருந்த ரியல் எஸ்டேட் வியாபாரம் இந்த மதுக்கடை திறக்க புதிய இடம் தேடும் முயற்சியால் புத்துயிர் பெற்றுள்ளதாம் ஆம் இப்பொழுது கடற்கரை அருகே இருக்கும் இடங்களுக்கு செம கிராக்கியாம் குறிப்பாக அந்த மூன்று மதுக்கடைகள் இயங்கும் தெருவில் இடம் வாங்க கடும் போட்டி நடைபெற்று வருகின்றதாம்.இவையெல்லாம் ஒரு புறம் இருக்க காரைக்கால் கடற்க்கரையில் இதுநாள் வரையில் உணவுப் பொருட்களை  விற்பனை செய்து வரும் கடைகளுக்கு போட்டியாக இந்த மூன்று மதுக்கடைகள் இருக்கும் சாலையில் அமைந்துள்ள கடைகளில் வியாபாரம் அதிகரித்துள்ளதாம் அதனால் அங்கு வியாபாரம் செய்யவே கடும் போட்டி நிலவி வருகிறதாம் இதற்கிடையில் காரைக்கால் கடற்கரைக்கு செல்லும் சாலையான தோமாஸ் அருள் வீதியிலும்  மூடிய மதுக்கடைகளை திறக்க திட்டமிடப்பட்டு வருகின்றதாம்.

இது தொடர்பாக மக்கள் குடியிருப்பு பகுதிகளுக்கு  அருகே மதுக்கடைகளை திறக்க எதிர்ப்பு தெரிவித்து காரைக்கால் தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அசனா நேற்று மாவட்ட ஆட்சியர் கேசவனை சந்தித்து மனுவை வழங்கினார் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி நாடு முழுவதும் தேசிய நெடுஞ்சாலைப் பகுதியில் செயல்பட்டு வந்த மதுபானக் கடைகள் மூடப்பட்டன. காரைக்காலிலும் அவ்வாறு செய்யப்பட்ட நிலையில், அகற்றப்பட்ட கடைகள் யாவும் நகரப் பகுதியில் குடியிருப்புகள், கல்வி நிலையங்கள், வழிபாட்டுத் தலங்கள் அருகே அமைக்கப்பட்டு வருகின்றன. தேசிய நெடுஞ்சாலையில் இயங்கி வந்த மதுக்கடைகள் யாவும் குடியிருப்புப் பகுதியில் அமைந்து வருவதால், மக்கள் நிம்மதியை இழந்து வருகின்றனர்.இதேபோல், மதுக்கடைகள் பல கடற்கரைப் பகுதியில் அமைக்கப்பட்டு வருகின்றன. இது கடற்கரைக்கு பொழுதுபோக்குக்காக செல்வோருக்கு சிரமத்தை ஏற்படுத்தும். புதுச்சேரி அரசு, மதுபான வியாபாரிகள் நலனுக்காகவே பல்வேறு விதிகளை மீறி செயல்பாடுகளை மேற்கொண்டு வருகிறது. இது மிக தவறான அணுகுமுறையாகும். மக்களின் வாழ்வாதாரத்துக்கு முன்னுரிமை தர வேண்டுமே தவிர, மதுபான வியாபாரிகளுக்கு அரசு அடிமையாக இருக்கக் கூடாது.தற்போது தேசிய நெடுஞ்சாலைக்கு இணையாக, காரைக்காலில் உள்ள காமராஜர் சாலை, திருநள்ளாறு சாலை மற்றும் திருநள்ளாறு முதல் அம்பகரத்தூர் வரையிலான சாலையையும் கருதி, மதுக்கடைகள் அமைக்க அரசு நிர்வாகம் அனுமதி தரக் கூடாது எனக் கூறினார்.

பகிர்ந்து மகிழுங்கள்
சமூக →
தொடர →
பகிர →

0 comments:

கருத்துரையிடுக

ஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்

Related Posts Plugin for WordPress, Blogger...