தகவல்களை மின்-அஞ்சலில் பெற !
karaikal ammaiyaar Karaikal lady of angel church karaikal kailasanathaar veethi ula karaikal mosque Title of image Title of image

வேதாரண்யம் கோடியக்கரை பகுதிகளில் பிளாஸ்டிக் முட்டை விற்பனை செய்யப்பட்டு வருவது உண்மைதானா ? நாகை மாவட்டத்தில் மீண்டும் விஸ்வரூபம் எடுக்கும் பிளாஸ்டிக் முட்டை பீதி - உணவுத்துறை அதிகாரிகள் சோதனை

கடந்த 8 மாத காலமாகவே நாகை மாவட்டத்தில் பிளாஸ்டிக் முட்டை விற்பனை செய்யப்பட்டு வருவதாக அவ்வப்பொழுது பொது மக்களிடையே பீதி எழுந்து வருகிறது இந்நிலையில் நாகை மாவட்டம் வேதாரண்யம் தாலுகாவுக்கு உட்பட்ட வேதாரண்யம்,கோடியக்கரை ,கோடியக்காடு பகுதிகளில் பிளாஸ்டிக் முட்டை விற்பனை செய்யப்பட்டு வருவதாக தகவல் பரவியது இதனையடுத்து உணவுத்துறை அதிகாரிகள் கோடியக்கரையில் உள்ள ஒரு சில கடைகளில் ஆய்வு மேற்கொண்டனர்.

சில தினங்களுக்கு முன் அமிர்தலிங்கம் என்பவர் ஒரு கடையில் வாங்கிய முட்டை வழக்கத்திற்கு மாறான அளவிலும் இரண்டு முட்டைகளை  ஒட்டியது போல காணப்பட்டதாகவும்  கூறப்படுகிறது இதனால் அவை பிளாஸ்டிக் முட்டையாக இருக்கலாம் என சந்தேகம் எழுந்தது இந்த செய்தி கோடியக்கரை மற்றும் வேதாரண்யம் பகுதிகளில் காட்டுத்தீ போல பரவியது இதனையடுத்து வேதாரண்யம் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் கோடியக்கரை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள கடைகளில் முட்டைகளை உடைத்து சோதனை செய்து பார்த்தனர் சோதனையில் அவை அனைத்தும் உண்மையான முட்டைகள் என தெரியவந்தது இதனையடுத்து வேதாரண்யம் மற்றும் அதன் சுற்று வட்டாரப்பகுதிகளில் பிளாஸ்டிக் முட்டை மற்றும் பிளாஸ்டிக் அரிசி விற்பனை செய்யப்படவில்லை எனவும் பொதுமக்கள் வீணாக அச்சப்பட தேவையில்லை எனவும் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி கேட்டுக்கொண்டள்ளார் .


பகிர்ந்து மகிழுங்கள்
சமூக →
தொடர →
பகிர →

0 comments:

கருத்துரையிடுக

ஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்

Related Posts Plugin for WordPress, Blogger...