தகவல்களை மின்-அஞ்சலில் பெற !
karaikal ammaiyaar Karaikal lady of angel church karaikal kailasanathaar veethi ula karaikal mosque Title of image Title of image

புதுச்சேரி மாவட்டத்தின் நீர்நிலைகளில் தொடர்ந்து அரங்கேறும் மணல் திருட்டுக்கள் - மணல் குவாரிகளை அரசே எடுத்து நடத்தி விற்பனையை முறைப்படுத்த வேண்டும் பொதுமக்கள் கோரிக்கை

புதுவையில் ஏற்பட்டுள்ள கடும் மணல் தட்டுப்பாட்டால் செல்லிப்பட்டு அருகே சங்கராபரணி ஆற்றில் மாட்டு வண்டிகள் மூலம் மணல் திருட்டு தாராளமாக நடைபெற்று வந்ததாகவும் குறிப்பாக ,செல்லிப்பட்டில்  இருந்து வழுதாவூர் செல்லும் மேம்பாலத்தில் தினந்தோறும் அதிகாலை மற்றும் இரவு நேரங்களில் அனுமதியின்றி ஏராளமான மாட்டு வண்டிகளில் மணல் அள்ளப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருவதாகவும் தொடர்ந்து புகார்கள் எழுத்து வந்தன. இதனையடுத்து புதுச்சேரி சங்கராபரணி ஆற்றில் சட்டவிரோதமாக நடைபெறும் மணல் திருட்டை தடுக்க 6 மாதங்களுக்கு முன்பு புதுச்சேரி வருவாய் துறையினரால் மணல் திருட்டில் ஈடுபட்டு வந்த மாட்டு வண்டிகள் பறிமுதல் செய்யப்பட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டதன் மூலம் அபராதமும் விதிக்கப்பட்டது.புதுச்சேரி வருவாய் துறையின் இந்த அதிரடி நடவடிக்கையை அடுத்து சங்கராபரணி ஆற்றுப்படுகையில் சில நாட்கள் மணல் திருட்டு குறைந்து இருந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் 6 மாதத்திற்கு முன்பு அதிகாலை மற்றும் இரவு நேரங்களில்  மறைமுகமாக நடைபெற்று வந்த மணல் திருட்டு தற்பொழுது சில நாட்களாக பட்டப்பகலில் வெளிப்படையாக நடைபெற்று வருவதாக அப்பகுதி மக்கள் வருத்தம் தெரிவித்து  வருகின்றனர்.இந்த மணல் திருட்டால் சங்கராபரணி ஆற்றில் பல இடங்களில் மணல் முழுவதுமாக அடியோடு அகற்றப்பட்டு விட்டதாம் அதனால் அப்பகுதியில் பெரிய பெரிய பள்ளங்கள் உருவாகி உள்ளனவாம்.

இதே போல புதுச்சேரி மாவட்டம் பாகூர் அருகே இருக்கும் மற்றொரு முக்கிய நீர்நிலையான தென்பெண்ணை ஆற்றிலும் மணல் திருட்டு நடைபெற்று வருவதாக புகார்கள் எழுந்து வருகின்றன சில நாட்களுக்கு முன் மணல் திருட்டை தடுக்க பசுமை தீர்ப்பாயம் வழக்கு பதிவு செய்து சட்ட விரோதமாக மணல் அள்ளுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது மேலும் புதுச்சேரி வருவாய் துறை சார்பில் மணல் அள்ளுபவர்களை தடுக்க 2 சோதனை சாவடிகளும் அப்புகுதியில் அமைக்கப்பட்டது ஆனாலும் மணல் திருடும் கும்பலை தடுக்க முடியவில்லை என அப்பகுதி மக்களும் வருத்தம் தெரிவித்து வருகின்றனர்.

இந்த சட்ட விரோத மணல் திருட்டை கட்டுப்படுத்தவும் மணல் விற்பனையை முறைப்படுத்தவும் புதுச்சேரி அரசே அப்பகுதியில் மணல் குவாரிகளை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை பொதுமக்கள் மத்தியில் எழுந்து வருகிறது.

பகிர்ந்து மகிழுங்கள்
சமூக →
தொடர →
பகிர →

0 comments:

கருத்துரையிடுக

ஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்

Related Posts Plugin for WordPress, Blogger...