தகவல்களை மின்-அஞ்சலில் பெற !
karaikal ammaiyaar Karaikal lady of angel church karaikal kailasanathaar veethi ula karaikal mosque Title of image Title of image

சுங்கச்சாவடிகளில் நாள் முழுவதும் காத்திருந்தாலும் கட்டணம் செலுத்த வேண்டியது காட்டாயம் - தேசிய நெடுஞ்சாலை ஆணையம் ! - 3 நிமிடங்களுக்கு மேல் காத்திருக்கும் பட்சத்தில் சுங்கக்கட்டணம் வழங்க வேண்டிய அவசியமில்லை என்ற வதந்திக்கு முற்றுப்புள்ளி

நாடெங்கிலும் உள்ள சுங்கச்சாவடிகளில் மூன்று நிடங்களுக்கு மேல் காத்திருக்கும் பட்சத்தில் சுங்கக் கட்டணம் செலுத்த வேண்டிய கட்டாயமில்லை என பஞ்சாப் மாநிலம் லூதியானாவை சேர்ந்த வழக்கறிஞர் ஒருவர் சமூக ஊடகங்களில் பதிவிட்டு இருந்தார். இதனையடுத்து சுங்கச்சாவடிகளில் காத்திருந்த கசப்பான அனுபவம் நிறைந்த மக்கள் அந்த செய்தியை சமூக ஊடகங்களில் தங்களது பக்கத்தில்  மறு பதிவு செய்ய தொடங்கினர் இதன் பிறகு அடுக்கடுக்கான ஷேர்கள் ,லைக்குகள் என்று முகநூலில் இந்த செய்தி வைரலானது பின்னர் இந்த செய்தி சில பத்திரிக்கைகளிலும் வெளியாகி சுங்கச்சாவடியில்  கட்டணம் செலுத்த மறுக்கும் அளவுக்கு மக்களின் மனதில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது.

இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து தேசிய நெடுஞ்சாலை ஆணையம் தனது இணையதளத்தில் விளக்கமளித்துள்ளது அதன்படி நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கக்கச்சாவடிகளில் கட்டணம் வசூலிப்பது தொடர்பான சட்டத்திருத்தம் 2010 இன் கீழ் நேரம் மற்றும் காத்திருப்பது தொடர்பாக எந்த வித விளக்கும் அளிக்கப்படவில்லை என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.அப்படியானால் சுங்கச்சாவடிகளில்  ஒரு நாள் முழுக்க காத்திருந்தாலும் கட்டணம் கட்டாயம் என்று தானே அர்த்தம்.


பகிர்ந்து மகிழுங்கள்
சமூக →
தொடர →
பகிர →

1 comments:

Related Posts Plugin for WordPress, Blogger...