தகவல்களை மின்-அஞ்சலில் பெற !
karaikal ammaiyaar Karaikal lady of angel church karaikal kailasanathaar veethi ula karaikal mosque Title of image Title of image

கொடைக்கானலுக்கு சுற்றுலா செல்ல விரும்புகிறீர்களா - கொடைக்கானலில் அதிகரித்து வரும் கண்ணுக்கு தெரியாத வெள்ளை ஈக்களால் (Whitefly) நோய் தொற்று ஏற்படும் அபாயம் - உங்களை பாதுகாத்துக்கொள்வது எப்படி ?

தமிழகத்தில் கடுமையான வறட்சி நிலவிய காலங்களில் எல்லாம் தங்களின் உடல் வெப்பத்தை தனிப்பதற்காகவும் பரபரப்பான நகர வாழ்க்கையில் இருந்து சற்று விலகி ஓய்வெடுக்க ஒரு அழகான ,அமைதியான இடத்தை தேடி அலைபவர்களும் சுற்றுலாவுக்காக தமிழகத்திற்குள்ளேயே தேர்ந்தெடுக்கும் முதல் நகரம் கொடைக்காணலாக தான் இருக்க முடியும்.ஊட்டி ,ஏற்காடு என பல மழை பிரதேசங்கள் தமிழகத்தில் இருந்தும் கொடைக்கானலுக்கு தொடர்ந்து சுற்றுலா வருபவர்களை நிறுத்தி ஏன் கொடைக்காணலுக்கே திரும்ப திருப்ப சுற்றுலா வருகிறீர்கள் என்று கேட்டோமேயானால் அவர்கள் கூறும் ஒரு வாக்கியம் இதுதான் " கண்கொட்ட  கண்கொட்ட முடியாமல் பரத்தும் சலிக்காத நகரம் கோடைக்கானல் " என்பது தான் அது.

ஒருபுறம் இப்படி தங்கள் சொந்த நகரங்களில் ஏற்பட்டு இருக்கும் வறட்சியை மறக்க மக்கள் கொடைக்கானலுக்கு படையெடுக்க மறுபுறம் கொடைக்கானலே கடும் வறட்சியில் சிக்கி தவிக்கிறது என்பது தான் உண்மை.ஆம் மலை கிராம விவசாயிகள் பலரும் தங்களது தோட்டங்களில் பீன்ஸ் ,மலைப்பூண்டு ,உருளைக்கிழங்கு போன்ற பயிர்களை பயிரிட்டு வந்தனர் ஆனால் பொதிய  மழை இல்லாததால் பயிர்கள் தண்ணீரின்றி வாடி இருக்கின்றன அதுமட்டுமின்றி சில நாட்களாக கொடைக்கானலை அடுத்த பூம்பாறை உட்பட பல கிராமங்களில் வெள்ளை ஈக்கள் எனப்படும் 'வொயிட் பிளைஸ் ' பூச்சுக்களின் தாக்குதல் அதிகரித்துள்ளது இவை சாதாரண ஈக்களை விட அளவில் சிறியவை சமீப காலங்களில் முன் எப்பொழுதும் இல்லாத அளவிற்கு இவை எண்ணிக்கையிலும் அதிகமாக காணப்படுகின்றன இதனுடைய நிறமும் அளவும் மனிதர்களின் கண்களுக்கு  புலப்படாமல் அவர்களின் சட்டைகள் மீது சென்று அமர அவைகளுக்கு உதவி புரிகின்றன குறிப்பாக தாவரங்கள் மற்றும் பழங்களின் நிறத்தில் இருப்பதால் இவைகள் பச்சை ,கருப்பு ,சிகப்பு  மற்றும் மஞ்சை நிற ஆடைகளை குறிவைக்கின்றன நாம் மூச்சு விடும் பொழுது நமது மூக்கின் வழியாக இவற்றால் நம் நுரையீரலை சென்றடைய முடியும் அதனால் சுவாச பிரச்சனைகள் மற்றும் நோய் தொற்றுக்கு நாம் ஆளாக வேண்டியதிருக்கும்.

இந்த வெள்ளை ஈக்களின் பெருக்கத்தை தடுத்து மக்களையும் ,சுற்றுலா பயணிகளையும் காப்பாற்ற கொடைக்கானல் நகராட்சி நடவடிக்கை ஏதேனும் எடுக்குமா என்பதனை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

பகிர்ந்து மகிழுங்கள்
சமூக →
தொடர →
பகிர →

0 comments:

கருத்துரையிடுக

ஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்

Related Posts Plugin for WordPress, Blogger...