தகவல்களை மின்-அஞ்சலில் பெற !
karaikal ammaiyaar Karaikal lady of angel church karaikal kailasanathaar veethi ula karaikal mosque Title of image Title of image

02-09-2017 (செப்டம்பர் 2) ஆம் தேதி ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் ஆலயத்தில் குருபெயர்ச்சி திருவிழா

வருகின்ற 02-09-2017 (செப்டம்பர் 2) ஆம் தேதி அன்று திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் வட்டம் ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் ஆலயத்தில் குருபெயர்ச்சி திருவிழா நடைபெற உள்ளது.ஒவ்வொரு முறையும் குருபகவான் ஒரு ராசியிலிருந்து மற்றோரு ராசிக்கு பெயரும் பொழுது ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் ஆலயத்தில் குருபெயர்ச்சி திருவிழா கொண்டாடப்படுகிறது அதன்படி நிகழும் 2017 ஆம் ஆண்டுக்கான குருபெயர்ச்சி திருவிழா வரும் செப்டம்பர் -2 ஆம் நாளில் கொண்டாடப்பட உள்ளது.

02-09-2017 அன்று குருபகவான் கன்னி ராசியிலிருந்து துலாம் ராசிக்கு பிரவேசம் செய்கிறார் இதனையடுத்து நேற்று 23-08-2017 (ஆகஸ்ட் 23) ஆம் தேதி அன்று குருபகவானுக்கு முதல் கட்ட லட்சார்ச்சனை தொடங்கியது வரும் 31-08-2017 (ஆகஸ்ட் 31) ஆம் தேதிவரை இந்த லட்சார்ச்சனை நடைபெறும். குருப்பெயர்ச்சிக்கு பிறகு 07-09-2017 (செப்டம்பர் 7) ஆம் தேதி தொடங்கி 14-09-2017 (செப்டம்பர் 14) ஆம் தேதிவரை இரண்டாம் கட்ட லட்சார்ச்சனை நடைபெற உள்ளது.

இந்த ஆண்டு ஆலங்குடியில் நடைபெற இருக்கும் குருபெயர்ச்சி திருவிழாவை முன்னிட்டு அலங்குடிக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக திருவாரூர்,நாகப்பட்டினம் மற்றும் தஞ்சாவூர் மாவட்டங்களில் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் மாவட்ட நிர்வாகம் சார்பில் செய்யப்பட்டுள்ளது.ஆலங்குடி - ,திட்டை மற்றும் சூரியனார் கோயில்களுக்கு பல்வேறு நகரங்களில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.


பகிர்ந்து மகிழுங்கள்
சமூக →
தொடர →
பகிர →

0 comments:

கருத்துரையிடுக

ஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்

Related Posts Plugin for WordPress, Blogger...