தகவல்களை மின்-அஞ்சலில் பெற !
karaikal ammaiyaar Karaikal lady of angel church karaikal kailasanathaar veethi ula karaikal mosque Title of image Title of image

05-08-2017 அடுத்து வரக்கூடிய வாரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வானிலை எப்படி இருக்கும் - 10-08-2017 முதல் தமிழகத்தில் மழையின் அளவு அதிகரிக்கும்

06-08-2017 (ஞாயிற்றுகிழமை ) நாளை முதல் பிறக்க இருக்கும் வாரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வெப்ப சலன மழைக்கான வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது என்றே சொல்லலாம் குறிப்பாக தென் தமிழகத்தில் இனி வரக்கூடிய வாரத்தில் மழையின் அளவு அதிகரிக்க தொடங்கலாம்.

06-08-2017 (ஞாயிற்றுகிழமை ) தமிழகத்தின் தென் மாவட்டங்களிலும் ,டெல்டா மாவட்டங்களிலும் ,உள் மாவட்டங்களிலும் ,மேற்கு மாவட்டங்களிலும் மழைக்கு வாய்ப்புண்டு.

07-08-2017 (திங்கட்கிழமை ) தமிழகத்தின் மேற்கு தொடர்ச்சி மாவட்டங்களிலும் ,தென் மாவட்டங்களில் குறிப்பாக இராமநாதபுரம் ,சிவகங்கை  மாவட்டங்களில் மழையின் அளவு அதிகரிக்கும்

 08-08-2017 (செவ்வாய்க்கிழமை ) மேற்கு தொடர்ச்சி மாவட்டங்களில் நல்ல மழைக்கு வாய்ப்புண்டு.

09-08-2017 (புதன் கிழமை ) தமிழக உள் மாவட்டங்களிலும் ,தென் கடலோர மாவட்டங்களிலும் ,வட மாவட்டங்களிலும் ,டெல்டா மாவட்டங்களிலும் மழைக்கு வாய்ப்புண்டு.

10-08-2017 (வியாழக்கிழமை ) முதல் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழையின் அளவு அதிகரிக்க தொடங்கலாம் அன்று முதல் தமிழகத்தில் பரவலான மழையை எதிர்பார்க்கலாம்.

தற்பொழுது இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டு இருக்கும் தகவலின் படி எல்-நினோவின் தாக்கம் நடுநிலையாக உள்ளது மற்றும் காலநிலையியல் தொடர்பான மேடன் - ஜூலியன் அலைவு   (Madden Julian Oscillation) வீச்சும் (amplitude ) 1க்கும் குறைவாகவே உள்ளது வரக்கூடிய நாட்களுக்கும் அப்படியே தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது அதே போல இந்திய நினோ என்று சொல்லக்கூடிய இந்திய பெருங்கடலில் கிழக்கு மற்றும் மேற்கு துருவங்களுக்கு இடையே ஏற்படக்கூடிய வெப்பநிலை மாற்றங்களால் உருவாக கூடிய (Indian Ocean Dipole) பாதிப்புகளும் சாதராண அளவிலேயே உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த 10 நாட்களுக்கு அரபிக்கடல் மற்றும் வங்கக்கடல் பகுதிகளில் புயல் சின்னங்கள் உருவாக வாய்ப்பு இல்லை எனவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதனால் தற்போது நிலவும் வானிலையில் அடுத்த 10 நாட்களுக்குள் மிகப்பெரிய மாற்றத்தை எதிர்பார்க்க முடியாது என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் 10-08-2017 முதல் தமிழகத்தில் மழையின் அளவு அதிகரிக்க வாய்ப்பு இருக்கிறது என்பதை உறுதிப்படுத்தும் வகையில் 10 முதல் 16 ஆம் தேதி வரை உள்ள காலகட்டங்களில் தென் இந்தியாவில் மழையின் அளவு அதிகரிக்கும் எனவும் இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பகிர்ந்து மகிழுங்கள்
சமூக →
தொடர →
பகிர →

0 comments:

கருத்துரையிடுக

ஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்

Related Posts Plugin for WordPress, Blogger...