தகவல்களை மின்-அஞ்சலில் பெற !
karaikal ammaiyaar Karaikal lady of angel church karaikal kailasanathaar veethi ula karaikal mosque Title of image Title of image

ஏற்காடு சேர்வராயன் மலைப்பகுதியில் 10,000 ஆண்டுகள் பழமை வாய்ந்த புதிய கற்கால கருவிகள் கண்டெடுக்கப்பட்டன

சேலம் மாவட்டம் ஏற்காடு சேர்வராயன் மலைப்பகுதியில் உள்ள மாரமங்கலம் ,வடுக்கு மலையான் ,கேளையூர் உள்ளிட்ட கிராமங்களில் சேலம் மாவட்ட தொல்லியல் ஆய்வாளர்கள் மேற்கொண்ட ஆய்வில் வடக்கு மலையான் கோவில் மற்றும் கேளையூர் விநாயகர் கோயிலில் நூற்றுக்கும் மேற்பட்ட 6,000 முதல் 10,000 ஆண்டுகள் வரை பழமை வாய்ந்த புதிய கற்கால கருவிகள் (New Stone Age Weapons) கண்டெடுக்கப்பட்டன மேலும் மாரமங்கலம் அருகே 200 ஆண்டுகள் பழமைவாய்ந்த காட்டுப்பன்றி குத்தி பட்டான் நடுக்கல்லும் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய கற்காலம் என்பது மனிதன் கற்களைக் கொண்டு ஆயுதங்களை உருவாக்கி இடம்பெயர்வதை குறைத்து நிரந்தர இடத்தை அமைத்து ,வேட்டையாடி ,மிருகங்களை வீட்டில் வளர்த்து அதனை விவசாயம் செய்ய பயன்படுத்திய காலத்தை குறிக்கிறது.புதிய கற்காலத்தில் மனிதனின் இந்த சமூக பண்பாட்டு வளர்ச்சியை பற்றிய விஷயங்களை தான் புதுக்கற்காலப்புரட்சி  (Neolithic Revolution ) என்று கூறுகிறார்கள்.இன்றைய மனிதனின் நாகரிக வளர்ச்சியின் அடிப்படை புதிய கற்காலத்தில் தான் தொடங்கியது என்று சொன்னால் அது மிகையாகாது.

இந்த 10,000 ஆண்டுகள் பழமை வாய்ந்த கற்கால கருவிகள் சில நூற்றாண்டுகளுக்கு முன்பு கட்டிய கோயில்களில் எப்படி கிடைக்கப்பெற்றன என்கிற கேள்வி இங்கு எழுகிறது அதற்கு பதிலளிக்கும் விதமாக தொல்லியல் ஆய்வாளர்கள் ஒரு பதிலை தெரிவிக்கின்றனர் அதே என்னவென்றால் இப்பகுதிகளில் இருக்கும் ஓடைகள் ,மற்றும் விலை நிலங்களில் பல நூற்றாண்டுகளுக்கு முன்பு இந்த பழங்கால கருவிகள் அப்பொழுது இப்பகுதியில் வாழ்ந்து வந்த மக்களால் கண்டெடுக்கப் பட்டிருக்க வேண்டும் இதன் தொன்மையை அறிந்த அவர்கள் இவற்றை கோயிலில் வைத்து வழிபட்டு வந்திருக்க வேண்டும் என்றும் கூறுகின்றனர்.


பகிர்ந்து மகிழுங்கள்
சமூக →
தொடர →
பகிர →

0 comments:

கருத்துரையிடுக

ஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்

Related Posts Plugin for WordPress, Blogger...