தகவல்களை மின்-அஞ்சலில் பெற !
karaikal ammaiyaar Karaikal lady of angel church karaikal kailasanathaar veethi ula karaikal mosque Title of image Title of image

12-08-2017 அடுத்து வரக்கூடிய வாரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வானிலை எப்படி இருக்கும் ?

13-08-2017 (ஞாயிற்றுகிழமை ) முதல் தொடங்க இருக்கும் அடுத்து வரக்கூடிய வாரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வெப்பசலன மழைக்கான வாய்ப்பு பிரகாசமாக உள்ளது என்றே சொல்லலாம்.அடுத்து வரக்கூடிய வாரத்தில் தமிழகம் முழுவதும் பரவலான மழையை எதிரிபார்க்கலாம் ஒரு சில இடங்களில் கன மழைக்கும் வாய்ப்புண்டு.நடுவில் ஒரு இரண்டு நாட்கள் தமிழக வட கடலோர மற்றும் தென் மாவட்டங்களில் சற்று தொய்வு காண்பது போல தோன்றினாலும் 19-08-2017 (சனிக்கிழமை) முதல் மீண்டும் மழையின் அளவு அதிகரிக்கலாம்.


13-08-2017 (ஞாயிற்றுகிழமை ) - நாளை தமிழகத்தின் வட மற்றும் வட கடலோர ,தென் கடலோர மாவட்டங்களில் நல்ல மழைக்கு வாய்ப்புண்டு கோயம்பத்தூர் ,நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களிலும் மழைக்கு வாய்ப்புண்டு சென்னை ,புதுச்சேரி உள்ளிட்ட வட கடலோர மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கன மழைக்கும் வாய்ப்புண்டு.

14-08-2017 (திங்கட்கிழமை ) அன்று தமிழக வட மற்றும் வட கடலோர மாவட்டங்களிலும் டெல்டா மாவட்டங்களிலும் கன மழைக்கு வாய்ப்புள்ளது.

15-08-2017 (செவ்வாய்க்கிழமை ) அன்று தமிழக உள் மாவட்டங்களில் மழையின் அளவு சற்று குறைந்து இருப்பது போல  தோணலாம் வட மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் னால மழை பொழியலாம்.

16-08-2017 (புதன்கிழமை ) அன்று தமிழக உள் மாவட்டங்களில் மழையின் அளவு குறையும் வட கடலோர ,தென் கடலோர மற்றும் மேற்கு தொடர்ச்சி மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புண்டு.

17-08-2017 (வியாழக்கிழமை ) அன்று தமிழக வட மாவட்டங்களில் னால மழைக்கு வாய்ப்புண்டு.

18-08-2017 (வெள்ளிக்கிழமை ) அன்று வங்கக்கடலில் விசாகப்பட்டினம் அருகே ஒரு மேலடுக்கு சுழற்சி உருவாக வாய்ப்பு உள்ளது அது நகரும் திசையை பொறுத்தே அடுத்த சில நாட்களுக்கு தமிழகத்தில் தமிழகத்தில் மழைக்கான வாய்ப்பு இருக்கும்.

19-08-2017 (சனிக்கிழமை ) மேலடுக்கு சுழற்சியானது வலு அடைந்து ஆந்திராவை நோக்கி நகரும் பொழுது தமிழகத்தில் மீண்டும் மழையின் அளவு அதிகரிக்கும்.



 

பகிர்ந்து மகிழுங்கள்
சமூக →
தொடர →
பகிர →

0 comments:

கருத்துரையிடுக

ஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்

Related Posts Plugin for WordPress, Blogger...