தகவல்களை மின்-அஞ்சலில் பெற !
karaikal ammaiyaar Karaikal lady of angel church karaikal kailasanathaar veethi ula karaikal mosque Title of image Title of image

19-08-2017 அடுத்து வரக்கூடிய வாரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வானிலை எப்படி இருக்கும் ?

20-08-2017 (ஞாயிற்றுகிழமை ) நாளையுடன் பிறக்க இருக்கும் வாரம் தமிழகம் மற்றும் புதுச்சேரிக்கு மழைக்கான வாய்ப்புகளை அல்லி வழங்க இருக்கிறது.நான் இதற்கு முந்தைய பதிவுகளில் கூறியிருந்தது போல தற்பொழுது வட ஆந்திர மாநிலம் அருகே ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உள்ளது இதனால் அடுத்த இரண்டு நாட்களுக்கு சென்னை உட்பட வட தமிழகத்தில் உள்ள மாவட்டங்கள் பலன் அடையக்கூடும் .

அடுத்த இரண்டு நாட்களுக்கு தெலுங்கானா,ஆந்திரா,மத்திய பிரதேசம் மற்றும் மஹாராஷ்த்திர மாநிலங்களின் பெரும்பாலான பகுதிகளில் நல்ல மழைக்கு வாய்ப்புண்டு இன்று ஹைதராபாத் நகரில் கன மழைக்கு வாய்ப்புண்டு நாளை மும்பை நகரில் கன மழை பெய்யலாம் சில இடங்களில் வெள்ளப்பெருக்கும்  ஏற்படலாம்.

22-08-2017 அல்லது 23-08-2017 அன்று வங்கக்கடலில் ஒரு மேலடுக்கு சுழற்சி உருவாகலாம் அதனால் மீண்டும் ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்புள்ளது.

20-08-2017 (ஞாயிற்றுகிழமை ) - கேரள எல்லையை ஒட்டியுள்ள தமிழக பகுதிகளிலும் ,தென் கடலோர மாவட்டங்களிலும் ஒரு சில உள் மாவட்டங்களிலும்,வட மாவட்டங்களிலும் மழைக்கு வாய்ப்புண்டு.

21-08-2017 (திங்கட்கிழமை )  -  கேரள எல்லையை ஒட்டியுள்ள தமிழக பகுதிகளிலும் ,தென் கடலோர மாவட்டங்களிலும் ஒரு சில உள் மாவட்டங்களிலும்,வட மாவட்டங்களிலும் மழைக்கு வாய்ப்புண்டு.

22-08-2017 (செவ்வாய்க்கிழமை ) - டெல்டா மாவட்டங்களிலும் ,தென் மாவட்டங்களிலும் ,தென் கடலோர மாவட்டங்களிலும் ஒரு சில உள் மாவட்டங்களிலும்,வட மாவட்டங்களிலும் மழைக்கு வாய்ப்புண்டு.

23-08-2017  (புதன்கிழமை ) - தென் மாவட்டங்களில் மழையின் அளவு அதிகரிக்கும் ,டெல்டா மற்றும் வட மாவட்டங்களிலும் நல்ல மழைக்கு வாய்ப்புண்டு.

24-08-2017 (வியாழக்கிழமை ) - தமிழக வட கடலோர மாவட்டங்களிலும் ,டெல்டா மாவட்டங்களிலும் ,தென் மற்றும் வட மாவட்டங்களிலும் நலன் மழைக்கு வாய்ப்புண்டு.

25-08-2017 ( வெள்ளிக்கிழமை ) - தென் மாவட்டங்களிலும் ஒரு சில வட மாவட்டங்களிலும் மழைக்கு வாய்ப்புண்டு.

26-08-2017 (சனிக்கிழமை ) - தென் மாவட்டங்களிலும் ஒரு சில வட மாவட்டங்களிலும் மழைக்கு வாய்ப்புண்டு.



பகிர்ந்து மகிழுங்கள்
சமூக →
தொடர →
பகிர →

0 comments:

கருத்துரையிடுக

ஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்

Related Posts Plugin for WordPress, Blogger...