தகவல்களை மின்-அஞ்சலில் பெற !
karaikal ammaiyaar Karaikal lady of angel church karaikal kailasanathaar veethi ula karaikal mosque Title of image Title of image

19-12-2017 திருநள்ளாறு சனிப்பெயர்ச்சி திருவிழா - பக்தர்களுக்கு அன்னதானம் மற்றும் பொருட்கள் வழங்க தடை

வருகின்ற 19-12-2017 (2017 டிசம்பர் 19) ஆம்  தேதி அன்று காரைக்கால் மாவட்டம் திருநள்ளாறு கொம்யூன் பஞ்சாயத்தை சார்ந்த ஸ்ரீ  தர்பாரான்யேஸ்வரர் கோயிலின் சனிப்பெயர்ச்சி விழா கொண்டாடப்பட உள்ளது.திருநள்ளாறு சனிப்பெயர்ச்சி திருவிழா முக்கிய விழாக்களில் ஒன்றாக கருதப்படுகிறது அத்திருவிழாவு நடைபெறும் சமையத்தில் நாடெங்கிலும் இருந்து லட்சக்கணக்கான மக்கள் திருநள்ளாறு கோயிலுக்கு வருகை தருவர்.தற்போதிலிருந்தே ஒவ்வொரு சனிக்கிழமைகளிலும் திருநள்ளாறுக்கு வரும் மக்களின் எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கிவிட்டது சமீப நாட்களாக நாட்டின் முக்கிய அரசியல் தலைவர்களும் ,திரை நட்சத்திரங்களும் ,விளையாட்டு வீரர்களும் திருநள்ளாறு சனிப்பெயர்ச்சிக்கு வருகை புரிந்து வருவதால் அங்கு பாதுகாப்பது ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.

 நிகழும் 2017 ஆம் ஆண்டு டிசம்பர் 19 ஆம் தேதி இரண்டரை ஆண்டுகளுக்கு ஒரு முறை மட்டுமே வரும் சனிப்பெயர்ச்சி விழா திருநள்ளாறில் நடைபெற உள்ளது. இந்த விழாவுக்கான முன்னேற்பாடுகள் குறித்து நேற்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது.அப்பொழுது பேசிய கோயில் நிர்வாக அதிகாரி பன்னீர் செல்வம் , லட்சக்கணக்கான பகதர்கள் வருகைதருவார்கள் என்பதால் கடந்த சில மாதங்களாக பல முன்னேற்பாடு பணிகள்  கோயில் நிர்வாகம் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என தெரிவித்தார்.மேலும் இது தொடர்பாக அவர் தெரிவிக்கையில் பக்தர்களுக்கு போதுமான கழிவறைகள் மற்றும் தண்ணீர் வசதி செய்யப்பட்டுள்ளது .சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்க நளன் குளம் மற்றும் கோயிலை சுற்றியுள்ள பகுதிகளில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.தங்கும் அறைகள் தயாராக உள்ளது.கோயிலின் உட்புறம் மற்றும் வெளிப்புறங்களில் 125 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்படுகிறது மேலும் கோயிலுக்கு வரும் பக்தர்களின் நலன் கருதி தனியார்கள் அன்னதானம் மற்றும் பொருட்கள் வழங்குவதற்கு அனுமதி வழங்குவதில்லை என  செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.


பகிர்ந்து மகிழுங்கள்
சமூக →
தொடர →
பகிர →

0 comments:

கருத்துரையிடுக

ஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்

Related Posts Plugin for WordPress, Blogger...