தகவல்களை மின்-அஞ்சலில் பெற !
karaikal ammaiyaar Karaikal lady of angel church karaikal kailasanathaar veethi ula karaikal mosque Title of image Title of image

21-08-2017 சூரிய கிரகனமான இன்று காரைக்கால் ,நாகூர் பகுதிகளில் சூரியனை சுற்றி தெரிந்த அழகிய ஒளிவட்டம் - 22° பரிவட்டம் அல்லது ஒளிவட்டம் என்றால் என்ன ?

21-08-2017 இன்று சூரியனுக்கும் பூமிக்கும் இடையே சந்திரன் வரும் நிகழவான சூரிய கிரகணம் நடைபெற்றது.99 ஆண்டுகளுக்கு பிறகு வட அமெரிக்காவில் இதைப்போன்ற முழு சூரியகிரகணம் நடைபெற்றதாக கூறப்படுகிறது. இவையெல்லாம் ஒருபுறம் இருக்க இன்று தமிழகத்தில் நாகை மாவட்டத்திலும் நாகைக்கு அருகே உள்ள புதுச்சேரி மாநிலத்தை சார்ந்த பகுதியான காரைக்கால் மாவட்டத்திலும் பல்வேறு இடங்களில் சூரியனை சுற்றி அழகிய ஒளிவட்டம் தோன்றி இருந்தது.முதலில் பார்ப்பவர்களை சற்று அதிர்ச்சியில் திகைக்க செய்யும் இந்த ஒளிவட்டமானது 22° பரிவட்டம் என்று அழைக்கப்படுகிறது இது குருள் மேகங்களில் (Cirrus Clouds ) காணப்படும் பணிப்படிகங்களால் தோற்றுவிக்கப்படுகிறது.குருள் மேகங்களில் கணபப்டும் அந்த பணிப்படிகங்கள் ஒரு அறுங்கோண (Hexagonal ) பட்டகங்களைப் போல செயல்பட்டு சூரியனை சுற்றி வெண்ணிற அல்லது வண்ணப்பரிவட்டங்களை தோற்றுவிக்கின்றன.சூரியனை சுற்றி தெரியும் இந்த வட்டத்தினை அகல் வட்டம் என்றும் சிலரால் அழைக்கப்படுகிறது.

இந்த அகல்வட்டங்கள் உலகெங்கிலும் பொதுவாக 22° ஒளிவட்டம் (22° Halo ) என்றே வழங்கப்படுகின்றன இதற்கு காரணம் நமது பார்வையில் இருந்து கணக்கிட்டோமேயானால் சூரியனுக்கும் அந்த ஒளிவட்டத்துக்கும் இடையேயான கோணம் 22° என்ற அளவில் இருக்கும் அதை கீழே இருக்கும் படத்தில் தெளிவாக காணலாம்.




பகிர்ந்து மகிழுங்கள்
சமூக →
தொடர →
பகிர →

0 comments:

கருத்துரையிடுக

ஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்

Related Posts Plugin for WordPress, Blogger...