25-08-2017 இன்று விநாயகர் சதுர்த்தி திருவிழா தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மிக சிறப்பான முறையில் கொண்டாடப்பட்டு வருகிறது. இம்முறை கடந்த ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் இயற்கைமுறையில் அதாவது களிமண்,விதைகள் மற்றும் எளிதில் மக்களும் தன்மை உடைய பொருட்கள் கொண்டு தயாரிக்கப்பட்ட விநாயகர் சிலைகளை வாங்க பொதுமக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.சுற்றுப்புறச்சூழலுக்கு தீங்கு விளைவிக்கும் ராசாயனங்கள் குறித்த விழிப்புணர்வு இம்முறை மக்களிடம் அதிகரித்துள்ளது என்று சொன்னால் அது மிகையாகாது. அந்த வகையில் நிகழும் 2107 ஆம் ஆண்டு நடைபெற இருக்கும் விநாயகர் சதுர்த்தி திருவிழா மிகவும் சிறப்பு வாய்ந்தது என்றே சொல்லலாம்.
24-08-2017 நேற்று மாலை முதல் காரைக்காலின் பல்வேறு பகுதிகளில் இயற்கைக்கு பாதிப்புகளை உண்டாக்காத களி மண்களால் செய்த விநாயகர் சிலைகளின் விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது மேலும் அந்த விநாயகர் சிலைகள் ₹ 50 முதல் ₹60 ரூபாய்க்குள் விற்பனை செய்யப்படுவதால் பொதுமக்கள் அந்த சிலைகளை வாங்க ஆர்வம் கட்டி வருகின்றனர்.

0 comments:
கருத்துரையிடுக