தகவல்களை மின்-அஞ்சலில் பெற !
karaikal ammaiyaar Karaikal lady of angel church karaikal kailasanathaar veethi ula karaikal mosque Title of image Title of image

26-08-2017 அடுத்து வரக்கூடிய வாரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வானிலை எப்படி இருக்கும் ?

27-08-2017 (ஞாயிற்றுக்கிழமை ) முதல் தொடங்க இருக்கும் வாரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இதற்கு முந்தைய நாட்களுடன் ஒப்பிடுகையில் மழையின் அளவு லேசாக குறைய தொடங்கும் தற்பொழுது வட ஆந்திரம் மற்றும் ஒடிசா அருகே ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது மேலும் இது மேற்கு நோக்கி நகர வாய்ப்புள்ளது அதனால் வரக்கூடிய வாரத்தில் வட ஆந்திரா ,ஒடிசா ,தெலுங்கானா ,மத்தியபிரதேசம் ,சத்திஸ்கர் ,மஹாராஷ்த்திரா மற்றும் வட கர்நாடகா மாநிலங்களில் நல்ல மழைக்கு வாய்ப்புண்டு.

28-08-2017 ஆம் தேதி முதல் மும்பை உட்பட மஹாராஸ்திரா ,கர்நாடகா மற்றும் கேரளா மாநிலங்களின் கடலோர பகுதிகளில் மழையின் அளவு அதிகரிக்க தொடங்கும் இதனால் கேரள எல்லையை ஒட்டியுள்ள தமிழக பகுதிகளில் நல்ல மழைக்கான வாய்ப்புண்டு.

31-08-2017 அல்லது 01-09-2017 ஆம் தேதிகளில் மேற்குவங்கம் ஒடிசா அருகே மீண்டும் ஒரு மேலடுக்கு சுழற்சி உருவாகலாம்.

தமிழகத்தை பொறுத்தவரையில் கடந்த வாரத்தில் ஒரு சில குறிப்பிட்ட பகுதிகளை தவிர மற்ற இடங்களில் அவ்வப்போழுது மழை பதிவாகிவந்தது நாளை முதல் தொடங்க இருக்கும் வாரத்தில் பரவலான மழை இன்றி ஒரு சில இடங்களில் கன மழையும் சில இடங்களில் கணிசமான அளவு மழையும் பொழிய வாய்ப்புள்ளது மாநிலம் முழுமைக்கும் சேர்த்து பார்த்தால் கடந்த வாரத்தை விட இந்த வாரம் ஒட்டு மொத்த மழையின் அளவு குறைந்தே இருக்கும்.

பகிர்ந்து மகிழுங்கள்
சமூக →
தொடர →
பகிர →

0 comments:

கருத்துரையிடுக

ஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்

Related Posts Plugin for WordPress, Blogger...