தகவல்களை மின்-அஞ்சலில் பெற !
karaikal ammaiyaar Karaikal lady of angel church karaikal kailasanathaar veethi ula karaikal mosque Title of image Title of image

காரைக்கால் - வேளாங்கண்ணி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள நாகை புத்தூர் ரயில்வே மேம்பால இணைப்பில் ஏற்பட்டு இருக்கும் விரிசல் எப்பொழுது தான் சரி செய்யப்படும் ? -சமூக ஊடகங்களில் தொடர்ந்து முன்வைக்கப்படும் விவாதங்கள்

காரைக்கால் மற்றும் தூத்துக்குடி துறைமுகங்களை சாலை மார்கமாக இணைக்கும் வகையில் கிழக்கு கடற்கரை சாலை திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டது தான் நாகப்பட்டினம்  - தூத்துக்குடி கிழக்கு கடற்கரை சாலை இந்த சாலையில் திருவாரூர் - நாகப்பட்டினம் மற்றும் காரைக்கால் - வேளாங்கண்ணி  சாலைகள் இணையும் இடத்திற்கு  அருகாமையில் அமைந்து இருப்பது தான் இந்த புத்தூர் ரயில்வே மேம்பாலம்.

ரயில்கள் இப்பகுதியை கடந்துசெல்லும் பொழுது இவ்வழியாக சாலையில் பயணிக்கும் பயணிகள் நீண்ட நேரம் காத்திருப்பதை தவிர்க்கும் நோக்கத்தில்  நாகை  - புத்தூர் இடையே ரயில்வே மேம்பாலம் அமைக்கப்பட்டது.கடந்த 2013 ஆம் ஆண்டில் மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்ட  இந்த ரயில்வே மேம்பாலத்தின் இணைப்புப் பகுதியில் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு விரிசல் ஏற்பட்டு இருந்தது இதனையடுத்து அந்த மேம்பாலத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருவதாக கோரி கடந்த மார்ச் 25 ஆம் தேதி முதல் அந்த மேம்பாலத்தில் பயணம் செய்ய தடை விதிக்கப்பட்டது.

தற்பொழுது மக்கள் புத்தூர் ரயில்வே கடவுப்பாதையை மாற்று வழியாக பயன்படுத்தி வருகின்றனர்.காரைக்கால் ,நாகப்பட்டினம் ,திருவாரூர் போன்ற அணைத்து மார்க்கமாக வேளாங்கண்ணிக்கு வருகை புரியும் பயணிகள் இதனால் கடுமையாயாக பாதிக்கப்பட்டுள்ளனர்.சில நேரங்களில் புத்தூர் அண்ணாசாலையில் கடும் போக்குவரத்து நெரிசலும் ஏற்படுகிறது இதனால் வெளியூர் பயணிகள் மட்டுமின்றி உள்ளூர் வாசிகளும் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர்.

இந்நிலையில் 29-08-2017 அன்று வேளாங்கண்ணி மாதா ஆலயத்தின் ஆண்டுத்திருவிழா நடைபெற இருக்கிறது இதனால் உலகெங்கிலும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வேளாங்கண்ணிக்கு வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது இதற்கிடையில் கடந்த 4 மாதமாக சரி செய்யப்படாத இந்த மேம்பால சீரமைப்பு பணிகளால் வரக்கூடிய வாரத்தில் நாகையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படவும் வாய்ப்புள்ளதாக சமூக ஆர்வலர்கள் சமூக வலைத்தளங்களில்  பதிவிட்டு வருகின்றனர் இப்போதாவது அரசு மேம்பால சீரமைப்பு பணிகளில் முழு கவனம் செலுத்தி இனி வரவிருக்கும் இன்னல்களில் இருந்து போதும்மக்களை மக்களை காப்பாற்றுமா? என சமூக ஊடகங்களில் பொதுமக்களும் ,சமூக ஆர்வலர்களும் தொடர்ந்து விவாதித்தில் ஈடுபட்டு வருகின்றனர்.


பகிர்ந்து மகிழுங்கள்
சமூக →
தொடர →
பகிர →

0 comments:

கருத்துரையிடுக

ஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்

Related Posts Plugin for WordPress, Blogger...