தகவல்களை மின்-அஞ்சலில் பெற !
karaikal ammaiyaar Karaikal lady of angel church karaikal kailasanathaar veethi ula karaikal mosque Title of image Title of image

ஆகாயகங்கை நீர்வீழ்ச்சியில் கொட்டும் நீர் - கொல்லிமலைக்கு படையெடுக்கும் சுற்றுலா பயணிகள்

நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையில் கடந்த ஒரு வார காலமாக தொடர்ந்து மழை பெய்து வருவதால் அங்கிருக்கும் காட்டாறுகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.கொல்லிமலையின் முக்கிய நீர்வீழ்ச்சியான ஆகாய கங்கையில் நீர்வரத்து அதிகரித்து தண்ணீர் கொட்டோ கொட்டோ என்று  கொட்டுகிறது அதுமட்டுமல்லாமல் நம்மருவி ,சினிபால்ஸ் ,மாசிலா அருவி ஆகியவற்றிலும் அதிக அளவில் தண்ணீர்  வருகிறது மேலும் கொல்லிமலை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் வெப்பம் குறைந்து மிதமான சீதோஷண நிலை நிலவி வருவதால் கொல்லிமலைக்கு படையெடுக்கும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை மலமலவென அதிகரித்து வருகிறது.

கொல்லிமலையை சுற்றி இருக்கும் காடுகளில் மிக அறிய வகையான நோய் தீர்க்கும் மூலிகைகள் இருப்பதாக கூறப்படுகிறது அந்த மூலிகைகளில் பட்டு வரும் இந்த நீர் தங்களை மீது பட்டால் தங்களை பிடித்து இருக்கும் பிணி தீரும் எனவும் இங்கு வரும் சுற்றுலா பயணிகள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.இதைப் போன்ற விஷயங்கள் அறவியல் பூர்வமாக நிரூபணம் ஆகாவிட்டாலும் அறிவியலுக்கு புலப்படாத இயற்கையின் அதிசயங்கள் எவ்வளவோ இருக்கின்றன என்பதையும் மறுக்க முடியாது எதுவாக இருப்பினும் நம்பிக்கையுடன் அந்த நீர்வீழ்ச்சியில் நீராடினால் உடலில் உள்ள பிணி தீருமோ இல்லையோ மனம் நிறைந்து சில மாற்றங்கள் அரங்கேறும் என்று நம்புவோம்.


பகிர்ந்து மகிழுங்கள்
சமூக →
தொடர →
பகிர →

0 comments:

கருத்துரையிடுக

ஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்

Related Posts Plugin for WordPress, Blogger...