தகவல்களை மின்-அஞ்சலில் பெற !
karaikal ammaiyaar Karaikal lady of angel church karaikal kailasanathaar veethi ula karaikal mosque Title of image Title of image

நாகப்பட்டினத்தில் 16ஆம் நூற்றாண்டில் போர்த்துகீசியர்களால் கட்டப்பட்ட மாதரசி மாதா தேவாலய ஆண்டு திருவிழா 10-08-2017 (நேற்று ) அன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது

நாகப்பட்டினம் ஆங்கிலேயர் காலத்திலும் பண்டைய தமிழ் வரலாற்றிலும் முக்கிய துறைமுக நகராக அறியப்படுகிறது.இங்கு தான் 16ஆம் நூற்றாண்டில் போர்த்துகீசிய மாலுமிகளால் கட்டப்பட்ட பழமையான மாதரசி மாதா தேவாலயம் உள்ளது.1660 ஆம் ஆண்டு டச்சுக்காரர்களின் கட்டுப்பாட்டிற்கு  கைமாறியது  நாகப்பட்டினம்,இதனால் டச்சுக்காரர்களால் மாதரசி மாதா ஆலயத்தின் சொரூபத்திற்கு  ஆபத்து இருப்பதாக கருதிய பக்தர்கள் மாதாவின் திருச்சொரூபத்தை ஒரு பெட்டியில் மறைத்து வைக்க திட்டமிட்டனர்.மறுநாள் காலையில் தேவாலயத்திற்கு சென்று பார்த்தபொழுது ஒரு பெட்டியில் தலை சாய்ந்த நிலையில் மாதரசி மாதாவின் திருச்சொரூபம் இருந்தது இந்த நிகழ்வுக்கு பிறகு மாதரசி மாதாவின் புகழ் உலகெங்கும் பரவியதாக கூறப்படுகிறது.

நாகபட்டினம் முதன்மை கடற்கரை சாலையில் அமைந்துள்ள இத்தேவாலயத்தின் ஆண்டு திருவிழா ஒவ்வொரு ஆண்டும் விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது.அதன்படி நிகழும் 2017ஆம் ஆண்டுக்கான ஆண்டு திருவிழா கொண்டாட்டங்கள் 10-08-2017 (நேற்று ) நாகப்பட்டினத்தில் கொடியேற்றத்துடன் தொடங்கியது.முன்பெல்லாம் வேளாங்கண்ணிக்கு  வருகைபுரியும் பக்தர்கள் நாகப்பட்டினத்தில் உள்ள இந்த மாதரசி மாதா தேவாலயத்துக்கு சென்று ஜெபித்து வருவதை வழக்கமாக கொண்டிருந்தனர் இப்பொழுது வேளாங்கண்ணிக்கு பயணம் செய்வோர் புறவழிச்சாலை வழியாக பயணிப்பதால் இந்த தேவாலயத்தின் தொன்மையும் ,சிறப்பும் தெரிந்தவர்கள் மட்டுமே இங்கு வருகை புரிகிறார்கள்.காலங்கள் எப்படி மாறினாலும் இந்த மாதரசி மாதா தேவாலயம் நாகப்பட்டினத்தில் வரலாற்று சின்னங்களில் ஒன்றாக திகழ்கிறது என்பதில் மாற்றுக்கருத்தே கிடையாது.


பகிர்ந்து மகிழுங்கள்
சமூக →
தொடர →
பகிர →

0 comments:

கருத்துரையிடுக

ஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்

Related Posts Plugin for WordPress, Blogger...