சில நாட்களுக்கு முன்பு புதுச்சேரி ரங்காபிள்ளை வீதியில் புதுச்சேரி மாசு கட்டுப்பாட்டு குழும அலுவலர்கள் மேற்கொண்ட ஆய்வில் சில கடைகளில் பயன்பாட்டில் இருந்த தரமற்ற 51 மைக்ரானுக்கும் குறைவான தடிமன் உள்ள நெகிழிப்பைகள் (Plastic Bags ) மற்றும் நெகிழிப்பொருட்கள் (Plastic Products ) பறிமுதல் செய்யப்பட்டன. ஆய்வு மேற்கொண்ட ஒருசில கடைகளிலேயே எப்படியென்றால் அப்பொழுது புதுவை மாநிலம் முழுவதும் எவ்வளவு தரமில்லாத நெகிழிப்பைகள் (Plastic Bags ) பயன்பாட்டில் இருக்கும் ? என்ற கேள்வி பொது மக்கள் மத்தியில் எழுந்தது.
இந்நிலையில் 51 மைக்ரானுக்கும் குறைவான நெகிழிப்பைகள் (Plastic Bags ) பயன்படுத்துவது தொடர்பாக புதுவை அறிவியல் தொழில்நுட்பம் மற்றும் சுற்றுசூழல் துறை உறுப்பினர் துவராககாந்த் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் இனி வரக்கூடிய காலங்களில் நெகிழிப்பைகளை தயாரிப்பவர் மற்றும் விற்பனையாளர்களிடம் 2 வார கால் இடைவேளையில் திடீர் ஆய்வுகள் மேற்கொள்ளப்படும் எனவே 51 மைக்ரானுக்கும் குறைவான தடிமனுள்ள நெகிழி தூக்குப்பைகளை தயாரிக்கவோ ,விற்பனைசெய்யவோ ,இருப்பு வைக்கவோ ,பயன்படுத்தவோ கூடாது என அறிவுறுத்தப்படுகிறது தவறும் பட்சத்தில் ரூபாய் 1 லட்சம் அபராதமும் 1 ஆண்டு வரை சிறை தண்டனையும் விதிக்கப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் புதுச்சேரியில் அனுமதிக்கப்பட்ட அளவுக்கும் குறைவான நெகிழிப்பொருட்களை விற்பனை செய்யவோ ,இருப்புவைக்கவோ ,தயாரிக்கவோ தடை விதிக்கப்பட்டுள்ளது என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

0 comments:
கருத்துரையிடுக