தகவல்களை மின்-அஞ்சலில் பெற !
karaikal ammaiyaar Karaikal lady of angel church karaikal kailasanathaar veethi ula karaikal mosque Title of image Title of image

2017 ஜூன் 1 முதல் ஆகஸ்ட் 31 வரை உள்ள காலகட்டத்தில் தமிழகத்தில் 251.5 மி.மீ அளவு மழை பதிவாகியுள்ளது - இது 204.2 மி.மீ என்கிற சராசரி அளவை விட 23% அதிகம்

01-06-2017 முதல் 31-08-2017 வரை உள்ள காலகட்டத்தில் தமிழகத்தில் 251.5 மி.மீ மழை பதிவாகியுள்ளது இது இந்த காலகட்டத்தின் சராசரி அளவான 204.2 மி.மீ உடன் ஒப்பிடுகையில் 23% அதிகம்.அதே போல புதுச்சேரியில் இந்த காலகட்டத்தில் 300 மி.மீ மழை பதிவாகியுள்ளது இது சராசரி அளவான 235.2 மி.மீ உடன் ஒப்பிடுகையில் 28% அதிகம்.

ஆகமொத்ததில் தென்மேற்கு பருவமழை காலங்களில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பதிவாகும் சராசரி அளவை விட இந்த  ஆண்டு அதிக மழை பதிவாகியுள்ளது.

இந்த காலகட்டத்தில் தமிழகத்திலேயே அதிகபட்சமாக திருவண்ணாமலை மாவட்டத்தில் 491.2 மி.மீ அளவு மழை பதிவாகியுள்ளது இது இந்த காலகட்டத்தின் அதன் மாவட்டத்தின் சராசரி அளவான 300.7 மி.மீ என்கிற அளவை விட 63% அதிகமாகும் இதற்கு அடுத்தபடியாக சிவகங்கை மாவட்டத்தில் 400.9 மி.மீ மழை இந்த காலகட்டத்தில் பதிவாகியுள்ளது இது அதன் சராசரி அளவான 202.1 மி.மீ உடன் ஒப்பிடுகையில் 98% அதிகமாகும்.

அதே சமயம் நீலகிரி மாவட்டத்தில் 01-06-2017 முதல் 31-08-2017 வரை உள்ள காலகட்டத்தில் 436.6 மி.மீ மழை பதிவாகியுள்ளது ஆனால் இது அதன் சராசரி அளவான 611.5 மி.மீ இந்த அளவை விட 29% சதவிகிதம் குறைவாகும் அதே போல காரைக்கால் மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காலத்தில்  இந்த ஆண்டு இதுவரையில் 137.9 மி.மீ அளவு மழை பதிவாகியுள்ளது இது அதன் சராசரி அளவான 191.5 மி.மீ என்கிற அளவை விட 28% குறைவாகும்.


பகிர்ந்து மகிழுங்கள்
சமூக →
தொடர →
பகிர →

0 comments:

கருத்துரையிடுக

ஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்

Related Posts Plugin for WordPress, Blogger...