தமிழகத்தின் முக்கிய கடலோர மாவட்டங்களான நாகை மற்றும் கடலூர் மாவட்டங்களை இணைக்கும் பாலமான கொள்ளிடம் ஆற்றுப்பாலத்தில் இணைப்பு ஒன்றில் சில தினங்களுக்கு முன் லேசான விரிசல் தென்பட்டது உடனே அந்த விரிசல் தற்காலிகமாக சரிசெய்யப்பட்டு அதன் இருப்புறங்களிலும் தடுப்பு பலகைகள் வைக்கப்பட்டது இந்நிலையில் 01-09-2017 (வெள்ளிக்கிழமை ) இன்று காலை பெய்த மழையால் மீண்டும் அந்த பாலத்தின் இணைப்பு ஒன்றில் லேசான விரிசல் தென்படுகிறது.இதனை கொள்ளிடம் பகுதியை சார்ந்த சமூக ஆர்வலர்கள் சமூக ஊடகங்களில் பதிவேற்றம் செய்து வருகின்றனர்.
சென்னை ,புதுச்சேரி ,கடலூர் ,சிதம்பரம் பகுதிகளுடன் சீர்காழி ,காரைக்கால் ,நாகபட்டினம் பகுதிகளை எளிமையான முறையியல் தரைவழியில் இணைக்க இந்த ஒரு பாலமே இதுநாள் வரையில் பயன்பாட்டில் இருந்து வருகிறது மேலும் வேளாங்கண்ணியில் கொடியேற்றப்பட்டு திருவிழா நடைபெற்று வரும் இத்தருணத்தில் இந்த கொள்ளிடம் பழத்தில் ஏற்படும் சிறு சிறு பழுதுகளால் அவ்வழியாக பயணம் செய்வோர் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகிவருகின்றனர்.பழுது சிறியதாக இருக்கும் பொழுதே அதே முழுமையாக சரி செய்வதை விடுத்தது இப்படி தற்காலிகமாக ஏனோ தானோ என்று சரி செய்யம்மால் முழுமையாக பழுது நீக்கப்பட வேண்டும் என்றும் சமூக ஊடகங்களில் தங்களுடைய கருத்தை பதிவிட்டு வருகின்றனர்.இன்னும் 45 முதல் 60 நாட்களில் வட கிழக்கு பருவமழை தொடங்கும் என எதிரிபார்க்கப் படுவதால் அரசு இந்த விஷயத்தில் அலட்சியம் காட்டாமல் உடனடியாக நடவடிக்கை எடுத்து பழத்தில் ஏற்பட்டு இருக்கும் அனைத்து பழுதுகளையும் சரி செய்ய வேண்டும் என்றும் அப்பகுதி மக்கள் தங்களுடைய கருத்தை தெரிவிக்கின்றனர்.

0 comments:
கருத்துரையிடுக