தகவல்களை மின்-அஞ்சலில் பெற !
karaikal ammaiyaar Karaikal lady of angel church karaikal kailasanathaar veethi ula karaikal mosque Title of image Title of image

12-09-2017 இன்று மாயவரத்தில் தொடங்கியது காவிரி மகா புஷ்கரம் திருவிழா - திருநள்ளாறு ,மயிலாடுதுறையில் குவியும் பக்தர்கள்

12-09-2017 இன்று 144 ஆண்டுகளுக்கு பிறகு நாகை மாவட்டம் மயிலாடுதுறை துலாக்கட்டத்தில் காவிரி மகா புஷ்கரம் திருவிழா தொடங்கியது விழாவின் முதல் நிகழ்வாக நாட்டின் 12 புண்ணிய நதிகளில் இருந்து நீர் எடுத்து வரப்பட்டு யாகங்கள் மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

குரு பகவான் நிகழும் ஆண்டு கன்னி ராசியிலிருந்து துலாம் ராசிக்கு பெயர்ந்துள்ளார் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை துலாம் ராசியில் ஓராண்டு காலம் குறு பகவான் பிறவேசிப்பார்.இந்நிலையில் நிகழும் 2017 ஆம் ஆண்டு 144 ஆண்டுகளுக்கு ஒரு முறை மட்டுமே கொண்டாடப்படும் மகா புஷ்கர விழா மயிலாடுதுறையில் கொண்டாடப்பட்டு வருகிறது.இந்த விழாவிற்காக நாகை மாவட்டம் முழுவதும் விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.

நேற்று இரவு முதலே இவ்விழாவிற்காக மயிலாடுதுறைக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்து வந்ததாக கூறப்படுகிறது இதனால் இன்று காரைக்கால் மாவட்டம் திருநள்ளாறுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.






பகிர்ந்து மகிழுங்கள்
சமூக →
தொடர →
பகிர →

0 comments:

கருத்துரையிடுக

ஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்

Related Posts Plugin for WordPress, Blogger...