தகவல்களை மின்-அஞ்சலில் பெற !
karaikal ammaiyaar Karaikal lady of angel church karaikal kailasanathaar veethi ula karaikal mosque Title of image Title of image

வேட்டையாடி அழிக்கப்பட வேண்டிய ' நீல திமிங்கலம் ' (Blue Whale ) ஒன்று சமூக வலைத்தளங்களில் சுதந்திரமாக சுற்றித்திருக்கிறது

நீலத்திமிங்கலம் (Blue Whale)  என்கிற இந்த விளையாட்டு இதனை விளையாடும் இளைஞர்களின் மனதைக் கெடுத்து அவர்களை தாமாகவே முன்வந்து தற்கொலை செய்துகொள்ள தூண்டுவதாக ஊடகங்களில் சுடச்சுட தற்போது  விவாதிக்கப்பட்டு வருகிறது ஒரு சிலர் இந்த விளையாட்டு உலகெங்கிலும் உள்ள தலை சிறந்த ஹேக்கர்களால் நடத்தப்பட்டு வருவதாகவும் அவர்களின் மிரட்டலுக்கு பயந்தே இளைஞர்கள் தங்கள் உயிரை மாய்த்துக் கொள்வதாகவும் கூறுகின்றனர் அதாவது ஒருமுறை அந்த குறிப்பிட்ட செயலியிலோ அல்லது இணையதலத்திலோ பதிவு செய்ய முற்படும்பொழுது நமது கணினி அல்லது அலைபேசியில் இருக்கும் தகவல்கள் அனைத்தையும் ஹேக்கர்கள் திருடிவிடுவதாகவும் பின்னர் அந்த தகவல்களில் இருக்கும் அந்தரங்க விஷயங்களைக் கொண்டு இந்த விளையாட்டை தொடர்ந்து விளையாடும்படி மிரட்டி அந்த இளைஞர்களுக்கு ஒரு வகையான அழுத்தத்தை அளித்து வருவதாகவும் சிலர் தெரிவிக்கின்றனர்.அதாவது இப்பொழுது ஒரு இளைஞர் தனது அலைபேசியில் உள்ள கூகிள் (google ) செயலியில் ஏதேனும் அந்தரங்கம் தொடர்புடைய வார்த்தைகளை பயன்படுத்தி ஒரு காணொளியை யூ டியூப் (YouTube) செயலி வழயாக காண்கிறார் என்று வைத்துக்கொள்வோம் அவர் பார்த்த அந்த காணொளி அதை தேடி எடுக்க அவர் பயன்படுத்திய சொல் என அனைத்தும் அவர்களால் திருடப்பட்டு விடும்.அதுமட்டுமல்லாமல் முகநூல் கடவுச்சொல் இணைய வங்கியின் ரகசிய கடவுச்சொல் அல்லது எண் என அனைத்தும் அவர்களின் கட்டுப்பாட்டுக்குள் வந்திவிடுமாம் அதைவிட முக்கியமானது என்னவென்றால் உங்களுடன் தொடர்பில் இருந்தவர்களின் அலைபேசி எண்,தொடர்புகொள்ள பயன்படுத்திய மின்னஞ்சல் முகவரி என அனைத்தையும் அவர்கள் திருடி விடுவார்களாம். இதன் மூலம் ஒரு வேலை நீங்கள் பாதியில் விளையாட்டில் இருந்து விலக நினைத்தால் உங்களின் அனுமதி இல்லாமலயே உங்களுடைய அலைப்பேசி மூலம் உங்களின் நெருக்கமானவர்களுக்கு அசிங்கமான குறுந்தகவல்களை அனுப்புவது உங்களுடைய சமூக வலைதள பக்கத்தில் அருவருக்கத்தக்க தகவல்களை பதிவேற்றம் செய்வது என்று உங்களை மனதளவில் டார்ச்சர் செய்து அவர்களின் கட்டளைக்கு உங்களை பணிய வைப்பார்களாம்.

நான் மேற்குறிய விஷயங்கள் அனைத்தும் அந்த நீலத்திமிங்கல விளையாட்டு குறித்து இணையத்தில் விவாதிக்கப்பட்ட தகவல்களின் தொகுப்பே ஆகும் இவை அனைத்தும் உண்மைதான் என அடித்து கூறும் அளவு ஆதாரங்கள் எதுவும் கிடையாது.இந்நிலையில் இந்த விளையாட்டுக்கு மூளையாக செயல்பட்ட 17 வயதுடைய ரஷ்யப் பெண் கைது செய்யப்பட்டு இருப்பதாக நேற்று செய்திகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது பின்னர் அவர் இந்த விளையாட்டின் இறுதி டாஸ்கான தற்கொலை செய்துகொள் என்ற கட்டளையை வழங்கும் அட்மின் என்று கூறப்பட்டது அப்பொழுது இவருடைய அட்மின் (தலைவர் ) யார் என்ற கேள்வி அங்கே பலர் மனதில் எழுந்தது. எல்லோரும் சொல்வதை போல இதை உலகின் தலை சிறந்த ஹேக்கர்கள் தான் நடத்தி வருகிறார்கள் என்று வைத்துக்கொள்வோம் அவர்கள் திட்டத்திட்ட 5000 பேர்கள் என்கிறது ஒரு சர்வதேச தனியார் ஊடகம் அப்படியானால் அவர்கள் எதற்காக இந்த விளையாட்டை அறிமுகப்படுத்தி நடத்தி வர வேண்டும் பணத்திற்காகவா ? அப்படியானால் அந்த பணத்தை இவர்களுக்கு வழங்குபவர் யார் ? இதற்கு பின்னால் சர்வதேச அரசியல் உள்ளதா ? இல்லை பூமியின் மக்கள் தொகையை குறைக்க ஏதேனும் சர்வதேச அமைப்பு மேற்கொள்ளும் மறைமுக நடவடிக்கையா (Undercover Operation ) ? அப்படியானால் அந்த சர்வதேச அமைப்பு எது ? இல்லை இது வளர்ந்த நாடுகளால் வளர்ந்துவரும் நாடுகளின் மீது திட்டமிட்டு நடத்தபப்டும் ஒரு தொழிநுட்ப போரா ? இதில் எது ? யார் ? எதற்கு ? போன்ற பல கேள்விகளுக்கு நம்மிடம் பதில் இல்லை.

உலகில் யார் வேண்டுமானாலும் இந்த விளையாட்டை விளையாட முடியும் ஆனால் இந்திய போன்ற வளர்ந்து வரும் நாடுகளில் தான் உயிர் பலிகள் அதிகமாக உள்ளது அது எதனால் ? ஒருவேளை நம்முடைய பிள்ளைகளுக்கு நாம் எதையும் எதிர்த்து போராடும் அளவுக்கான மன தைரியத்தை அளிக்கவில்லையோ ? என்று தோன்றுகிறது.இன்றைய டிஜிட்டல் உலகில் நமது கல்விமுறையிலும் உறவுகள் சார்ந்த சமூக காட்டமைப்பிலும் மாற்றம் வேண்டும் என்பதனையே இது உணர்த்துகிறது.எதுவாயினும்,வேட்டையாடி அழிக்கப்பட வேண்டிய ' நீல திமிங்கலம் ' (Blue Whale ) ஒன்று சமூக வலைத்தளங்களில் சுதந்திரமாக சுற்றித்திரிவது மனதுக்கு வேதனையளிக்கிறது.


பகிர்ந்து மகிழுங்கள்
சமூக →
தொடர →
பகிர →

0 comments:

கருத்துரையிடுக

ஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்

Related Posts Plugin for WordPress, Blogger...