தகவல்களை மின்-அஞ்சலில் பெற !
karaikal ammaiyaar Karaikal lady of angel church karaikal kailasanathaar veethi ula karaikal mosque Title of image Title of image

06-10-2017 அடுத்து வரக்கூடிய வாரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வானிலை எப்படி இருக்கும் ?

06-10-2017 தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்து வரக்கூடிய வாரத்திற்கான வானிலை எப்படி இருக்கும் என்று பார்ப்பதற்கு முன்னர் கடந்த 29-09-2017 அன்று நமது தளத்தில் பதிவிடப்பட்ட ஒரு சில தகவல்களை நினைவு கூற வேண்டியது அவசியமாகிறது. 29-09-2017 அன்று எழுதிய பதிவில் 06-10-2017 அல்லது 07-10-2017 தேதிகளில் வங்கக்கடலில் ஒடிசா அருகே ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு இருப்பதாக தெரிவித்து இருந்தேன் பின்னர் ஒரு சில பதிவுகளில் அதை உறுதி படுத்தியும் இருந்தேன்.நேற்று 05-10-2017 இந்திய வானிலை ஆய்வு மையம் அதிகார பூர்வமாக வெளியிட்டுள்ள அறிக்கையில் வடக்கு வங்கக்கடல் பகுதியில் ஒடிசா மற்றும் வட ஆந்திரா அருகே ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகலாம் என தெரிவித்துள்ளது அதனால் ஒடிசா ,ஜார்கண்ட் ,சத்தீஸ்கர் போன்ற மாநிலங்கள் அடுத்து வரக்கூடிய வாரத்தில் பயன்பெறும் எனவும் அதில் குறிப்பிடப்பட்டு உள்ளது.மேலும் 29-09-2017 அன்று எழுதிய பதிவில் 02-10-2017 க்கு பிறகு கர்நாடகா மற்றும் தெற்கு ஆந்திர பகுதிகளில் மழையின் அளவு அதிகரிக்கும் எனவும் 03-10-2017 முதல் வளி மண்டலத்தில் ஏற்பட இருக்கும் மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் மழையின் அளவு அதிகரிக்கும் என தெரிவித்து இருந்தேன் ஒரு சில தென் மாவட்டங்களை தவிர பிற பகுதிகளில் இதுவரை ஓரளவு நல்ல மழை பதிவாகிவருகிறது.

சரி தற்பொழுது அடுத்து வரக்கூடிய வாரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வானிலை எப்படி இருக்கலாம் என்பது குறித்து பார்ப்போம் 06-10-2017 இன்று ஒடிசா அருகே இருக்கும் காற்றழுத்த தாழ்வு பகுதி மற்றும் அரபிக்கடல் பகுதியில் உருவாகியிருக்கும் மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் பரவலான மழையை எதிர்பார்க்கலாம் பல இடங்களில் கனமழைக்கும் வாய்ப்புண்டு.இதற்கிடையில் 08-10-2017 அன்று வங்கதேசம் மற்றும் மேற்குவங்கம் பகுதிகளில் ஒரு மேலடுக்கு சுழற்சி உருவாக வாய்ப்பு உள்ளது அதே சமயம் கர்நாடக மாநிலம் அருகே அரபிக்கடலில் ஒரு மேலடுக்கு சுழற்சி நிலவ வாய்ப்பு உள்ளது அதனால் 07-10-2017 மற்றும் 08-10-2017 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் மழையின் அளவு இதற்கு முந்தைய நாட்களுடன் ஒப்பிடுகையில் சற்று குறைந்து இருப்பது போல தோன்றும் ஒரு சில இடங்களில் மட்டுமே கணமழையை எதிர்பார்க்கலாம்.09-10-2017 மற்றும் 10-10-2017 ஆகிய தேதிகளில் தமிழகம் மற்றும் புதுச்சேரியின் ஒரு சில பகுதிகளில் லேசாக மழையின் அளவு அதிகரிக்க தொடங்கலாம்.11-10-2017 முதல் மீண்டும் தமிழகத்தில் பரவலான மழையை எதிர்பார்க்கலாம்.
அரபிக்கடலில் நிலவும் மேலடுக்கு சுழற்சியானது 10-10-2017 ஆம் தேதி அல்லது அதற்கு பிறகு மேற்கு நோக்கி அதாவது அரபு நாடுகள் இருக்கும் திசையை நோக்கி நகரும் இதனால் தமிழகத்திற்கு என்ன பயன்  என்று நீங்கள் கேட்பீர்களேயானால் உங்களுக்கான பதில் இது தான் அதனால் ஈரோடு ,திருப்பூர்,கோவை மாவட்டங்களின் ஒரு சில பகுதிகளில் மேற்கு திசை காற்றின் வேகம் குறைந்து இருக்க வாய்ப்புள்ளது அதனால் 11-10-2017 ,12-10-2017 அல்லது 13-10-2017 ஆம் தேதிகளில் தாராபுரம் ,காங்கேயம் பகுதிகளிலும் மழையை எதிர்பார்க்கலாம் இதை ஏன் நான் இந்த பதிவில் குறிப்பிட்டு சொல்கிறேன் என்று அங்கு வசிப்பவர்களுக்கு தெரிந்து இருக்கும்.

நான் மேற்குறிய விஷயங்கள் யாவும் தற்பொழுது நிலவும் வானிலையை உள்ளடக்கிய ஒரு கணிப்பு தான் இதில் மாற்றங்கள் ஏதாவது இருப்பின் மீண்டும் பதிவிடுகிறேன்.

13-10-2017 (வெள்ளிக்கிழமை ) அன்று இந்த பதிவின் தொடர்சியை மீண்டும் பதிவிடுகிறேன்.

பகிர்ந்து மகிழுங்கள்
சமூக →
தொடர →
பகிர →

0 comments:

கருத்துரையிடுக

ஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்

Related Posts Plugin for WordPress, Blogger...