தகவல்களை மின்-அஞ்சலில் பெற !
karaikal ammaiyaar Karaikal lady of angel church karaikal kailasanathaar veethi ula karaikal mosque Title of image Title of image

13-10-2017 அடுத்து வரக்கூடிய வாரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வானிலை எப்படி இருக்கும் ?

13-10-2017 அடுத்து வரக்கூடிய வாரத்தில் வானிலை எப்படி இருக்கலாம் என்று பார்ப்பதற்கு முன்னர் வட கிழக்கு பருவமழை குறித்து கடந்த 10-10-2017 அன்று நான் எழுதிய பதிவில் தெரிவித்து இருந்த ஒரு சில தகவல்களை இங்கு நினைவுபடுத்துவது அவசியமாகிறது.10-10-2017 அன்று எழுதிய பதிவில் 17-10-2017 ஆம் தேதியில் வங்கக்கடல் பகுதியில் ஒரு மேலடுக்கு சுழற்சி உருவாக வாய்ப்பு இருப்பதாக பதிவிட்டு இருந்தேன் தற்பொழுது நாம் எதிர்பார்த்ததற்கு சற்று முன்பாகவே வருகின்ற 14-10-2017 அல்லது 15-10-2017 ஆம் தேதியில் வங்கக்கடல் பகுதியில் அந்தமானுக்கு வட மேற்கே வளிமண்டலத்தில் ஒரு மேலடுக்கு சுழற்சி உருவாக வாய்ப்பு உள்ளது அது ஒரு குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலு பெற வாய்ப்புகள் அதிகமாக உள்ளன அதனால் தமிழகத்தில் மழையின் அளவு வெகுவாக அதிகரிக்க தொடங்கலாம் அந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது 18-10-2017 அல்லது 19-10-2017 ஆம் தேதிகளில் வட வங்கக்கடலின் மத்திய பகுதிக்கு அருகே அதாவது மியான்மர் - வட ஆந்திர பகுதிகளுக்கு இடையில் உள்ள வங்கக்கடல் பகுதியில் ஒரு காற்றழுத்த தாழ்வு மண்டலம் என்கிற நிலையை எட்ட வாய்ப்புகள் உள்ளது தற்பொழுது நிலவும் சூழ்நிலைகளை கொண்டு பார்க்கும்பொழுது அந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது 20-10-2017 அல்லது அதற்கு பிறகு வரக்கூடிய தேதிகளில் வட ஆந்திராவுக்கும் - ஒரிசாவுக்கும் இடையில் கரையை கடக்க வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது.

தமிழகத்தை பொறுத்தவரையில் 14-10-2017 நாளை மத்திய அரபிக்கடல் பகுதியிலும் வளிமண்டலத்தில் ஒரு மேலடுக்கு சுழற்சி நிலவி வருவதால் கேரளா ,கர்நாடகாவின் கடலோர பகுதிகள் ,தெற்கு ஆந்திரா மற்றும் தமிழகத்தின் வட ,மேற்கு மற்றும் தென் மாவட்டங்களில் நல்ல மழையை எதிர்பார்க்கலாம் 15-10-2017 அன்றே மேகங்கள் ஆங்காங்கே திரண்டு வட கிழக்கு பருவமழை விரைவில் தொடங்க இருப்பதற்கான அறிகுறிகளை  வெளிப்படுத்த தொடங்கலாம் நான் ஏற்கனவே இதற்கு முந்தைய பதிவில் பதிவிட்டு இருந்தது போல 16-10-2017 முதல் 25-10-2017 வரை உள்ள நாட்களில் ஏதேனும் ஒரு நாளில் வட கிழக்கு பருவமழை தொடங்கியதாக அறிவிக்கப்படலாம்.
அதற்குள் புயல் குறித்த தவறான வதந்திகள் புதுச்சேரியில் பரப்பப்பட்டு வருவதாக நமது பக்கத்தின் பயனீட்டாளர் ஒருவர் ஒரு பதிவின் கருத்து பெட்டியில் பதிவிட்டு இருந்தார்.வீண் வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம் தற்பொழுது நிலவும் சூழ்நிலைகளைக் கொண்டு பார்க்கையில் அடுத்து வரக்கூடிய வாரத்தில் தமிழிகம் மற்றும் புதுச்சேரியை நோக்கி புயல் எதுவும் வருவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக தோன்றவில்லை.

மேலும் நான் மேலே பதிவிட்ட தகவல்கள் யாவும் தற்போது தமிழகத்தில் நிலவும் வானிலையை உள்ளடக்கிய ஒரு கணிப்பு தான் இதில் மாற்றங்கள் ஏற்படும் பட்சத்தில் மீண்டும் பதிவிடுகிறேன்.

பகிர்ந்து மகிழுங்கள்
சமூக →
தொடர →
பகிர →

0 comments:

கருத்துரையிடுக

ஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்

Related Posts Plugin for WordPress, Blogger...