தற்போது வங்கக்கடல் பகுதியில் வளிமண்டலத்தில் ஒரு மேலடுக்கு சுழற்சி உருவாகியுள்ளது அது தீவிரமடைந்து அடுத்த இரண்டு நாட்களில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவாக வாய்ப்பு உள்ளது மேலும் அது 18-10-2017 அல்லது 19-10-2017 ஆம் தேதியில் ஒரு காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று ஒரு சூறாவளியாக மாற வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது .அந்த புயலானது 19-10-2017 அல்லது 20-10-2017 ஆம் தேதி வாக்கில் வட ஆந்திரா அல்லது ஒடிசா அருகே கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது அதனால் அந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தமிழகத்தை விட்டு விலகி செல்கையில் அதாவது 18-10-2017 முதல் வட தமிழகத்தில் மழை குறைந்து வறண்ட வானிலை நிலவ வாய்ப்புகள் உள்ளது அதே சமயம் 19-10-2017 அன்று கேரள மாநிலத்துக்கு அருகே ஒரு மேலடுக்கு சுழற்சி உருவாக வாய்ப்பு இருப்பதால் தமிழகத்தின் ஒரு சில தென்மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உண்டு.அந்த சூறாவளியானது கரையை கடக்க முற்படும்பொழுது காற்றில் உள்ள ஈரப்பதம் அனைத்தும் உறிஞ்சப்படுவதால் அன்று முதல் தமிழகம் முழுவதும் வறண்ட வானிலை நிலவ தொடங்கம் மேலும் கரையை கடந்த அந்த புயல் மீண்டும் கிழக்கு திசையில் அதாவது வங்கக்கடலை நோக்கி நகர வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது.அவ்வாறு அது வலுவுடன் மீண்டும் கிழக்கு திசையில் நகரும் பட்சத்தில் அது தமிழகத்துக்கு அவ்வளவு நல்லதொரு விஷயமாக இருக்காது மாறாக அதனால் அன்று முதல் அடுத்து வரக்கூடிய சில நாட்களுக்கும் தமிழகத்தில் வறண்ட வானிலையே நிலவும்.அதனால் வடகிழக்கு பருவமழை தொடுங்குவதிலும் தாமதம் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது.
மேலே கொடுக்கப்பட்டுள்ள படத்தில் தற்பொழுது நிலவும் வானிலையை கொண்டு அடுத்து வரக்கூடிய 4 வாரங்களுக்கான மழை அளவு எப்படி இருக்கும் என்று விளக்கி கொடுக்கப்பட்டுள்ளது இதை நீடிக்கப்பட்ட வரம்பியல் கணிப்பு என்பார்கள் அதில் இடது பக்கம் இருக்கும் படங்கள் ஒவ்வொரு வாரத்திலும் இயல்பான அளவுடன் ஒப்பிடுகையில் மழையின் அளவு எப்படி இருக்கும் என்பதை விளக்கி காட்டுகிறது அதில் ஊதா மற்றும் ஆரஞ்சு நிறங்கள் மழை தனது இயல்பான அளவில் இருந்து மாறுபடுவதை காட்டுவதற்காக பயன்படுத்தப்பட்டு உள்ளது. ஊதா நிறங்கள் மழை அதிகரித்திருக்க கூடிய வாய்ப்புகளை உணர்த்துகின்றன ஆரஞ்சு நிறங்கள் மழையின் அளவு இயல்பான அளவை விட குறைந்து இருக்கலாம் என்பதை உணர்த்துகின்றன.அந்த நிறங்களின் அடர்த்தியை பொறுத்து அதன் அளவுகளும் அதிகரிக்கின்றன .அதில் 20-10-2017 முதல் 26-10-2017 ஆம் தேதி வரை உள்ள காலங்களிலும் 27-10-2017 முதல் நவம்பர் 02-11-2017 வரை உள்ள காலங்களிலும் தமிழகம் முழுவதும் இயல்பான அளவை விட மழை குறைந்திருக்க வாய்ப்புகள் அதிகம் இருப்பதாகவே தெரிவிக்கிறது.அதுவம் -5 ,-10,-15 என்கிற அளவில் இது மிகவும் மோசமான சூழல்.நான் ஒரு முறை இதற்கு முந்தய பதிவில் வடகிழக்கு பருவமழை முன்பாகவே அறிவிக்கப்பட வாய்ப்பு இருந்தாலும் தமிழகத்தில் நவம்பர் முதல் வாரத்துக்கு பிறகு தான் மழையின் அளவு அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக தெரிவித்து இருந்தேன் ஆனால் இப்பொழுது நிலவும் வானிலையின் அடிப்படையில் பார்த்தால் வட கிழக்கு பருவமழை தொடங்குவதிலேயே தாமதம் இருக்கும் என்பது போல தெரிகிறது.2017 ஆம் ஆண்டு வடகிழக்கு பருவமழையின் பயனை நவம்பர் மாதமாவது முழுமையாக வழங்குமா என்பதை பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும்.
தென்மேற்கு பருவமழை காலங்களில் ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில் கிடைத்த மழை நீரை முறையாக சேமித்து வைத்திருந்தால் விரைவில் தொடங்க இருக்கும் இந்த வறட்சியை சுலபமாக சமாளித்திருக்கலாம்.இனியாவது நீர் சேமிப்பின் முக்கியத்துவத்தை உணர்வோம் நீர் நிலைகளை பாதுகாப்போம்.

எல்லா ஏரிகளும் குளங்களும் நிரம்ப வேண்டும், அனைத்து ஆறுகள், ஓடைகளிலும் இரு கரைத் தொட்டு நீர் செல்ல வேண்டும். ஆகவே இன்னும் நிறைய மழை பொழிந்து நாடு செழிக்க வேண்டும்.
பதிலளிநீக்கு