தகவல்களை மின்-அஞ்சலில் பெற !
karaikal ammaiyaar Karaikal lady of angel church karaikal kailasanathaar veethi ula karaikal mosque Title of image Title of image

2017 ஆம் ஆண்டில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வடகிழக்கு பருவமழை எப்படி இருக்கும் ?

நிகழும் 2017 ஆம் ஆண்டில் வடகிழக்கு பருவமழை எப்படி இருக்கும் என்பதை பார்ப்பதற்கு முன்பு கடந்த 26-10-2017 அன்று வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்து இருக்கும் தகவல்களை இங்கே குறிப்பிட்டு சொல்ல விரும்புகிறேன்.

  • எல்-நினோ தெற்கு அலைவின் (El-nino Southern Oscillation ) தாக்கம் தற்பொழுது நடுநிலையாக உள்ளது மேலும் இந்த ஆண்டின் இறுதியில் லா-நினாவுக்கான சூழல்கள் உருவாக 50% வாய்ப்புகள் உள்ளது 
  • மேடன் ஜூலியன் அலைவு (Madden Julian Oscillation ) தற்பொழுது அதன் 7 வது கட்டத்தில் (phase ) 2 என்கிற வீச்சின் (amplitude ) அளவை கொண்டுள்ளது அடுத்த இரண்டு வாரங்களில் அது அதன் 2 வது கட்டத்துக்கு வரலாம்.
  • இந்திய பெருங்கடலின் இருமுனை (Indian Ocean Dipole ) ஆனது தற்பொழுது நடுநிலையான கட்டத்தில் உள்ளது.

முதலில் எல்-நினோ மற்றும் லா-நினா விவகாரத்துக்கு வருவோம் முதலில் அது குறித்த அடிப்படை தகவல்களை https://goo.gl/n4vHby என்ற இடுக்கையில் எளிமையான தமிழில் அறிந்து கொள்ளலாம் நான் தற்பொழுது கூறப்போகும் விஷயங்களை தெரிந்து கொள்வதற்கு முன் அந்த இடுக்கையில் உள்ள அடிப்படை தகவல்களை தெரிந்து கொள்வது நல்லது.
பொதுவாக கடல் பரப்பில் குளிரான சூழல் நிலவும் பகுதிகளில் புயல்கள் உருவாகுவது கிடையாது.

ஆசிய கண்டத்துக்கும் அமெரிக்காவுக்கும் இடையே உள்ளது தான் பசிபிக் பெருங்கடல் அதில் தென் அமெரிக்க கண்டத்துக்கு அருகே குளிரான சூழலும் இந்தோனேசியா அருகே வெப்பமான சூழலும் நிலவும் காற்று குளிரான சூழல் உள்ள பகுதியில் இருந்து வெப்பமான சூழல் நிலவும் பகுதிக்கு சென்று மேலெழும்பி பின்னர் மீண்டும் குளிரான சூழல் நிலவும் பகுதிக்கு கீழ்நோக்கி வந்து பின்னர் மீண்டும் வெப்பமான பகுதியை நோக்கி சென்று மேல் எலும்பும் இது தொடர்ந்து நடைபெற்று கொண்டே இருக்கும் இதை வால்கர் சுழற்சி (Walker Circulation ) என்று சொல்லுவார்கள்.வால்கர் சுழற்சியின் பொழுது வெப்பமான பகுதியில் காற்று மேலெழும்புகையில் குறைந்த காற்றழுத்தம் உருவாகிறது அந்த இடத்தில் புயல்கள் உருவாக வாய்ப்புகள் உருவாகின்றன இதன் தாக்கத்தால் இந்தியாவின் வங்கக்கடல் பகுதியிலும் குறைந்த காற்றழுத்த பகுதிகள் உருவாகி மழையின் அளவு அதிகரிக்கிறது.
எல்-நினோ தெற்கு அலைவின் (El-nino Southern Oscillation ) தாக்கம் நடுநிலையாக இருந்தால் நான் மேலே கூறியபடி வங்கக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்தங்கள் உருவாக அதிக வாய்ப்பை அது வழங்குகிறது.ஒரு வேலை எல்-நினோவின் தாக்கம் அதிகமாக இருந்தால் அதாவது தென் அமெரிக்க கண்டத்துக்கு அருகே உள்ள பசிபிக் கடல் பரப்பில் வெப்பம் அதிகரித்து இருந்தால் அது பருவமழை காலத்தில் இந்தியாவின் மழை அளவை குறைத்துவிடும் ஒரு வேலை பசிபிக் கடல் பரப்பில் வெப்பம் அதிகப்படியாக உயர்ந்தால் வால்கர் சுழற்சி (Walker Circulation ) தலைகீழாக நடைபெற வாய்ப்புகள் உள்ளது அதனால் தெற்கு அமெரிக்க கண்டத்துக்கு அருகே புயல்களும் இந்தியா மற்றும் இந்தோனேசியா பகுதிகளில் கடுமையான வறட்சியும் ஏற்படும்.தற்பொழுது லா-நினா வின் கதைக்கு வருவோம் அதாவது தென் அமெரிக்க கண்டத்துக்கு அருகே உள்ள பசிபிக் கடல் பரப்பில் வெப்பநிலை இயல்பை விட குறைந்து இருந்தால் வால்கர் சுழற்சி (Walker Circulation ) நன்றாக அல்லது வலுவாக நடைபெறுகிறது அதனால் மழையின் அளவும் அதிகரிக்கும் சில இடங்களில் கடுமையான வெள்ளப்பெருக்கும் ஏற்படும்.

கடந்த 2016 ஆம் ஆண்டில் நிலவிய சூழ்நிலைகள் வேறு ஆனால் தற்பொழுது நிலவும் சூழ்நிலையே வேறு தற்பொழுது எல்-நினோ தெற்கு அலைவின் (El-nino Southern Oscillation ) தாக்கம் நடுநிலையாக உள்ளது வானிலை ஆய்வு மையம் கூறிய படி இந்த ஆண்டு இறுதியில் லா -நினோவுக்கான 50% வாய்ப்பையும் சேர்த்து பார்த்தால் இதை நடுநிலைக்கும் லா-நினாவுக்கும் இடைப்பட்ட சூழல் என்று எடுத்துக்கொள்ளலாம் அதனால் தமிழகத்தில் இயல்பான மழை அளவு பதிவாக அதிக வாய்ப்புகள் உள்ளது.


அடுத்து நாம் விவாதிக்க இருப்பது மேடன் ஜூலியன் அலைவு (Madden Julian Oscillation ) இது எல்-நினோ தெற்கு அலைவு (El-nino Southern Oscillation ) போன்று ஓரிடத்தில் ஏற்படும் வெப்பநிலை மாற்றம் போல அல்லாமல் இந்திய பெருங்கடலில் தொடங்கி மணிக்கு 14 முதல் 29 கி.மீ வேகத்தில் பயணிக்கின்றன இவை 30 முதல் 60 நாட்கள் கிழக்கு திசையிலேயே பயணிக்கும் பிறகு மீண்டும் இந்திய பெருங்கடலில் உருவாகி மீண்டும் பயணிக்க தொடங்கும்.இவை அத்தனை முறையும் ஒரே அளவிலான மழையை வழங்குவது கிடையாது இது ஒரே மாதிரியாக ஒரே வேகத்தில் பயணிப்பதும் கிடையாது மேடன் ஜூலியன் அலைவு (Madden Julian Oscillation ) தொடர்பான ஆராய்ச்சிகள் இன்றும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன இது குறித்த முழு தகவல்களையும் இன்னொரு புதிய பதிவில் பதிவிடுகிறேன் இது இருக்கும் இடத்தை பொறுத்து இதனை 8 (Phase) கட்டமாக பிரிக்கிறார்கள் இதில் அது 2,3 மற்றும் 4 வது கட்டத்தில் (Phase) இருக்கும் பொழுது தமிழகம் மற்றும் வங்கக்கடல் பகுதியில் மழை அதிகரித்து இருக்கும்.இந்த பதிவுக்கு மேடன் ஜூலியன் அலைவு குறித்த இந்த தகவல்களே போதுமானது என கருதுகிறேன்.இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருப்பது போல நவம்பர் முதல் வாரத்துக்கு பிறகு மேடன் ஜூலியன் அலைவு (Madden Julian Oscillation ) 2 வது கட்டத்துக்கு (Phase 2) வருமேயானால் அது தமிழகத்தின் மழை அளவை அதிகரிக்கும்.உதாரணமாக 10-11-2017 முதல் தமிழகத்தில் மழையின் அளவு அதிகரிக்க தொடங்கி அது நவம்பர் மாத இறுதிவரையில் தொடரலாம் ஆக இந்த காலகட்டத்தில் தமிழகத்தில் இயல்பை விட அதிக மழை பதிவாகலாம்.

அடுத்து நாம் பார்க்க வேண்டியது இந்திய பெருங்கடலின் இருமுனை (Indian Ocean Dipole )இது என்னவென்றால் இந்திய பெருங்கடலின் கிழக்கு மற்றும் மேற்கு பகுதிகளுக்கு இடையே இருக்கும் வெப்பநிலை வேறுபாடுகள் பொதுவாக மேற்கு பகுதியுடன் ஒப்பிடுகையில் கிழக்கு பகுதியில் வெப்பம் அதிகமாக இருத்தல் வேண்டும் இதில் ஏதேனும் மாற்றங்கள் ஏற்பட்டால் அதுவும் மழையின் அளவை பாதிக்கும் தற்பொழுது அதன் தாக்கம் நடுநிலையாக உள்ளது என்கிற பட்சத்தில் அதைப்பற்றி நாம் பெரிதாக பயப்பட தேவையில்லை.

மொத்தத்தில் இந்த பருவமழை அளவை நிர்ணயிப்பதில் முக்கிய பங்கு மேடன் ஜூலியன் அலைவுக்கு (Madden Julian Oscillation ) உண்டு அந்த லா-நினா குறித்த 50% வாய்ப்பையும் நாம் கணக்கில் கொண்டு பார்த்தால் இம்முறை தமிழகத்தில் வட கிழக்கு பருவமழை 445 மி.மீ முதல் 460 மி.மீ வரை பதிவாகலாம் இது திட்டத்திட்ட இயல்பான அளவு தான்.

பகிர்ந்து மகிழுங்கள்
சமூக →
தொடர →
பகிர →

0 comments:

கருத்துரையிடுக

ஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்

Related Posts Plugin for WordPress, Blogger...