தகவல்களை மின்-அஞ்சலில் பெற !
karaikal ammaiyaar Karaikal lady of angel church karaikal kailasanathaar veethi ula karaikal mosque Title of image Title of image

24-10-2017 தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வடகிழக்கு பருவமழை எப்பொழுது தொடங்கலாம் ?

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வடகிழக்கு பருவமழை எப்பொழுது தொடங்கலாம் என்பதை பார்ப்பதற்கு முன்பு கடந்த 20-10-2017 அன்று நான் எழுதிய பதிவில் கூறியிருந்த ஒரு சில தகவல்களை மீண்டும் நினைவு படுத்த வேண்டிய அவசியம் உள்ளது.20-10-2017 அன்று நான் எழுதிய பதிவில் 26-10-2017 முதல் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழையின் அளவு அதிகரிக்க தொடங்கலாம் அடுத்து வரக்கூடிய நாட்களிலும் அதே நிலை தொடர்ந்து வட கிழக்கு பருவமழைக்கு தொடக்க மழையாக (ONSET RAIN) அது அமையலாம் என்று குறிப்பிட்டு இருந்தேன்.தற்பொழுது நிலவும் சூழ்நிலைகளை கொண்டு பார்க்கையில் 25-10-2017 நாளை முதல் வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு சாதகமான சூழல் உருவாக  வாய்ப்புகள் உள்ளது நாளை முதல் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வடகிழக்கு திசையில் இருந்து வீசும் காற்றின் வேகம் அதிகரிக்க தொடங்கும் அதுவே வரக்கூடிய நாட்களிலும் தொடரும் இதுவே வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு சாதகமான சூழல் ஆகும்.
நான் கடந்த 20-10-2017 அன்று எழுதிய பதிவில் தெரிவித்து இருந்தது போல 26-10-2017 முதல் தமிழகத்தில் மழையின் அளவு அதிகரிக்க தொடங்கலாம் அது அடுத்து வரக்கூடிய நாட்களிலும் தொடரலாம் 26-10-2017 முதல் 01-11-2017 ஆகிய தேதிகளுக்குள் ஏதேனும் ஒரு நாளில் வடகிழக்கு பருவமழை தொடங்கியதாக அறிவிக்கப்படலாம்.மேலும் 20-10-2017 அன்று நான் எழுதிய பதிவில் 24-10-2017க்கு பிறகு வரக்கூடிய நாட்களில் இலங்கைக்கு கிழக்கே வங்கக்கடல் பகுதியில் ஒரு மேலடுக்கு சுழற்சி உருவாக வாய்ப்பு இருப்பதாகவும் அது மேற்கு  திசையில் தமிழகத்தை நோக்கி நகர வாய்ப்பு இருப்பதாகவும்  கூறியிருந்தேன் தற்போது அதற்கான வாய்ப்பும்  அதிகரித்துள்ளது அடுத்து வரக்கூடிய வாரத்தில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகவும் வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது ஆனால் அது குறித்து எந்த ஒரு தகவலையும் இப்பொழுதே உறுதியாக கூறமுடியாது 27-10-2017 அன்று அடுத்து வரக்கூடிய வாரத்திற்கான வானிலை தகவல்களை பதிவிடுகையில் இது குறித்து உறுதியான தகவல்களையும் சேர்த்து பதிவிடுகிறேன்.

இந்த பதிவுடன் இரண்டு படங்களை இணைத்துள்ளேன் அதில் முதல் படத்தில் 23-10-2017 வங்கக்கடல் பகுதியில் வீசும் காற்றின் திசையும் இரண்டாவது படத்தில் தற்போதைய சூழ்நிலைகளே தொடந்தாள் 26-10-2017 அன்று காற்றின் திசை எப்படி இருக்கலாம் என்பதும் தெளிவாக கொடுக்கப்பட்டிருக்கிறது.இது இந்திய வானிலை ஆய்வு மைய அதிகார பூர்வ இணையதளத்தில் இருந்து எடுக்கப்பட்டது இதை நீடிக்கப்பட்ட வரம்பியல் கணிப்பு என்பார்கள் (Extended Range Forecast )

நான் கடந்த சில பதிவுகளில் தொடர்ந்து கூறி வருவது போல வடகிழக்கு பருவமழை எப்பொழுது தொடங்கியதாக அறிவிக்கப்பட்டாலும் நவம்பர் மாதம் முதல் வாரத்திற்கு பிறகுதான் அதாவது திட்டத்திட்ட நவம்பர் 10 ஆம் வாக்கில் தான் வடகிழக்கு பருவமழை தீவிரமடைய தொடங்கும்.

நான் மேலே பதிவிட்ட தகவல்கள் யாவும் தற்போது தமிழகத்தில் நிலவும் வானிலையை உள்ளடக்கிய ஒரு கணிப்பு தான் இதில் மாற்றங்கள் ஏற்படும் பட்சத்தில் மீண்டும் பதிவிடுகிறேன்.
பகிர்ந்து மகிழுங்கள்
சமூக →
தொடர →
பகிர →

0 comments:

கருத்துரையிடுக

ஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்

Related Posts Plugin for WordPress, Blogger...